பக்கம்:பாலைச்செல்வி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஆ புலவர் கா. கோவிந்தன் கொன்று, குடியோம்பி, அவ்வயல் நாட்டில் வாழும் நம் அன்பர். ஆற்றில், தெளிந்த புனல் அருவிகளாக ஒடும் இளவேனிற் பருவத்தின் இன்பத்தைப் பெற மாட்டாது என் பேரழகு பாழாகாவாறு பாதுகாக்க வருவாரோ? வாராரோ? என எண்ணி எண்ணி ஏங்குகிறதே என் உள்ளம்! இதற்கு யான் என் செய்வேன்!” எனக் கூறி வருந்தினாள். வருந்தும் அவள் நிலை கண்டு வருந்தினாள் அவளும். ஆயினும், சென்றவன் சொன்ன சொல் தவறாதவன். எதிர்த்தார் எவரையும் எளிதில் அழிக்க வல்ல ஆற்றல் வாய்ந்தவன், என்பதை அவள் அறிவாளாதலின், அவன் கூறிச் சென்றவாறே இவ்வேனிற் பருவத்தில் வந்து சேர்வன் என உறுதியாக நம்பினாள். அதனால், அவள் அப் பெண்ணை நோக்கிப், "பெண்ணே! வேனிற் பருவம் வந்து விட்டது என்பது உண்மை. ஆனால் அது நின் வருத்தத்தை வளர்க்க வந்திலது, யானையின் வருகையை முன்கூட்டி அறிவிக்க வரும் மணி யொலிபோல், விரைவில் வரவிருக்கும் நம் அன்பரின் வருகையை அறிவிக்கும் தூதாகவே வந்துளது. இதை அடுத்து அவர் வருவர். மேலும் வருகின்றவர் பகை வென்ற பெரும் புகழோடு வருவர். ஆக, இவ்வாண்டு வேனில் விழா, சென்ற விழாக்களிலும் சிறப்பளிக்கும் நினக்கு. ஆகவே, வருத்தம் ஒழிக! அவரை வரவேற்க வேண்டுவனவற்றை விரும்பி மேற்கொள்வாயாக!” என்று கூறித் தேற்றினாள். "ஒருகுழை யொருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும், பருதியம் செல்வன்போல் நனைஊழ்த்த செருந்தியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/193&oldid=822202" இலிருந்து மீள்விக்கப்பட்டது