பக்கம்:பாலைச்செல்வி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 இ. புலவர் கா. கோவிந்தன் ஆணைக்கு அடங்கி, அன்புடை மனைவியைப் பிரிந்து அவன் போய்விட்டனாக, பிரிந்த காதலர்க்குப் பெருந் துயர் தரும் இளவேனிற் பருவம், நிலைபெற வந்து நீள் துயர்தரத் தொடங்கி விட்டது கண்டு, நிலை குலைந்து வருந்தினாள். அப்பெண்ணின் துயர்நிலை கண்ட அவள் தோழி, அவளருகிற் சென்று, பெண்ணே பிரிந்து சென்றவர் நம்மை மறந்து விடார். அவர் இயல்பறியாது, பேதாய்! நீ இவ்வாறு வருந்துதல் நின் பெண்மைக்கு அழகன்று. நம்மைப் பிரிந்து தனித்து வாழ்வளாயின், பிரிந்தாரை வருத்தும் பருவம் பிறந்து விடுமாயின், காதலரோடு கண்டு களிக்கவல்ல காமவேள் விழாத் தொடங்கி விடுமாயின், அவள் பெரிதும் வருந்துவள் என உன்னையே எண்ணி இருக்கும் அவர் விரைந்திவண் வந்து சேர்வர், வருந்தற்க!” என்று கூறித் தேற்றத் தொடங்கினாள். 'வருவர் எனத் தோழி கூறினும், அப்பெண்ணின் உள்ளம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவளை நோக்கித், "தோழி! நாடு நலம் பெற்றுச் சிறக்கு மாறு மலர்களால் நிறைந்து நிற்கும் மரங்களின் மீது இருந்து, குயில்கள் இகழுமாறு நலன் இழந்து பசலை L–fig பாழுற்ற நம்மை மறக்கினும் மறக்குக! நம் பொருட்டு வாராதொழியினும் ஒழிக! அறிவால் சிறந்து, அறிவுடைப் பெருமக்கள் வாழ்வால் சிறந்து, பெரும்புகழ் பெற்று விளங்கும் நம் மதுரைமர் நகரில் நடைபெற விருக்கும் வேனில் விழாவில், அழகிய அணி பல அணிந்து ஆடரங்கேறி, ஆடிப்பாடி மகிழ் செய்யும் ஆடல் மகளிரை நினைந்தாவது வாராரோ? தோழி! அவர் பிரிவால் நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/199&oldid=822208" இலிருந்து மீள்விக்கப்பட்டது