பக்கம்:பாலைச்செல்வி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஆ 195 தளிர்களை விட்டுப் பொலிவு பெற்றுத் தோன்றின. வறுமையால் வாடி வந்தார்க்கும், வந்து தன் புகழ் பாடி நிற்பார்க்கும் வரையாது வழங்கி வாழும் அறநெறி யறிந்தான்பால் பொருந்திய செல்வம் போல் சிறந்து தோன்றின அம்மரங்கள். மரங்களை அடுத்து முளைத்துப் படர்ந்த முல்லைக் கொடிகள், அரும்பீன்று கிடந்தன. கேட்டார் அறிவை மயக்கும் இனிய சொல்லும், அழகிய பிணை மானின் பார்வை போலும் மருண்ட கண்ணும், கனிந்த காதலும் உடைய இளம் பெண்ணின் அழகிய பல் வரிசை போல் வனப்புற்றன அம் முல்லை முகைகள். ஆற்றின் கரைக்கண் பரந்து கிடக்கும் கருமணல்மீது மாந்தளிரும், முல்லை மலரும் வீழ்ந்து மணம் வீசின. தம் காதலரைப் புணர்ந்த மகளிரின் கூந்தலில் மலரும், தாழையும் கிடந்து மணம் நாறும் காட்சியை நினைப் பூட்டிற்று அம் மணற்பரப்பு. இவ்வாறு கரைக்கண் நிற்கும் மரங்கள், தம் காதலனை யொத்த ஆடவரையும், முல்லைக் கொடிகள், தன்னை நிகர் மகளிரையும், மணற்பரப்பு இளங்காதலர்களின் இணைபிரியாப் பெரு வாழ்வையும் நினைப்பூட்டவே, இவ்வின்பச் சூழ்நிலையில் இருந்து இன்பம் துய்க்கக் காதலர் இவண் இல்லையே! என எண்ணி வருந்தினாள். வாடிற்று அவள் நலம். இன்பம் தரும் தென்றல் துன்பம் தந்தது. ஆளும் முறையறியா அமைச்சன் ஏவிய வழிநின்று நாடாளும் நல்லறிவிழந்த அரசன் நாட்டில், அவன் பகைவர் படை, எளிதிற்புகுந்து, இன்னல் விளைத்து இருத்தல் போல், இளமையின் அருமை, அன்பின் பெருமை, செல்வத்தின் சிறுமை ஆகியவற்றின் இயல்பறியாத நெஞ்சம் வழி காட்ட, அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/198&oldid=822207" இலிருந்து மீள்விக்கப்பட்டது