பக்கம்:பாலைச்செல்வி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இ. புலவர் கா. கோவிந்தன் நாட்டைக் காக்கும் கடமை யுடையன். தந்நாட்டு மக்களுக்குப் பகைவரால் உண்டாம் கேட்டினைப் போக்கி நல்வாழ்வளிக்கும் பணி, மனைவியோடிருந்து மகிழ்ந்துறை வதினும் சிறந்தது என எண்ணும் அவன் செவ்விய உள்ளம், அவளை ஒருவாறு மறக்கச் செய்தது. அதனால், அவளைப் பிரிந்து போய், நாடு காவலில் நாட்டம் உடையவனாய் வெளிநாட்டில் வாழ்ந்திருந்தான், செல்லுங்கால், "காதலி கருதிச் செல்லும் வினை எவ்வளவு பெரிதாயினும், எதிர்க்கும் பகைவர் எவ்வளவு பெரும் படை யுடையராயினும், அவர் அனைவரையும் அழித்து, அவ்வினையை விரைவில் முடித்துக் கொண்டு வீடு திரும்புவேன். தலைநகரில் வேனில் விழாத் தொடங்குவதற்கு முன்னர் வந்து விடுவேன். வருந்தற்க!” என உறுதி உரைத்துச் சென்றிருந்தான். மன்னவர் குலத்து வந்த மகளாதலின், அவளும், அவன் மேற்கொள்ள விரும்பும் வினை வேண்டுவதே என உணர்ந்து, அவனைப் பிரிந்து வாழ்தற்கு ஒருவாறு உளம் தேறி உவந்து விடை தந்தாள். ஆனால், அவன் சென்று விட்ட பின்னர்த் தனிமை அவளை வருத்திற்று. நாள் ஆக ஆக, அவ்வருத்தம் வளர்ந்து கொண்டே வந்தது. அதனால், அவன் சென்றது நன்று எனும் நினைவு அற்றுப் போகத் தான் தனித்துக் கிடந்து வருந்த விடுத்துச் சென்றது. கொடுமையினும் கொடுமையாம் என எண்ணி அவன்மீது சினங்கொண்டு வாழ்ந்திருந்தாள். ೨5 நிலையில், அவன் வருவதாகக் கூறிச் சென்ற இள வேனிற்காலம் வந்துவிட்டது. வையையாற்றின் இரு மருங்கிலும் நிற்கும் மரங்களெல்லாம், புத்தம் புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/197&oldid=822206" இலிருந்து மீள்விக்கப்பட்டது