பக்கம்:பாலைச்செல்வி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விரைந்தே துணை தந்தார்! பாண்டி நாட்டு அரியணையில் அரசனோடு அமரும் உரிமையுடையாள் அவள். அரச வாழ்வில் வாழ்பவளேயெனினும் அவள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஒரு பொருளைப் பெற விரும்பி, அது கிடைக்கப் பெறாமையால் ஏமாந்து, அவ்வேமாற்றத்தின் விளைவால் தன் உள்ளம் கொள்ளும் கொடுத்துயரைக் காட்டிக் கொண்டிருந்தது அம்முகம். காரணம், அவள் கணவன், அந் நாடாளும் அரசன், அப்போது அவள் அருகில் இல்லை. அவளைப் பிரிந்திருந்தான். அவன் அவளைப் பிரிந்திருந்தது, அவள்மீது அன்பில்லாமையாலன்று. அவள், அவன் உயிர். அவளின்றி அவனால் வாழ்தல் இயலாது. அவள் மாட்டு அவ்வளவு பேரன்புடையன் அவன். அத்தகையான் அவள் வருந்துமாறு, அவளைத் தனியே விடுத்துப் பிரிந்து போயினன். அவளன்பை மறக்கச் செய்ய வல்லதும் ஒன்று இருந்தது. அதுவே அவன் கடமை யுணர்ச்சி. அரச குலத்தில் வந்த தான், தன் பாலை-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/196&oldid=822205" இலிருந்து மீள்விக்கப்பட்டது