பக்கம்:பாலைச்செல்வி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ●。 புலவர் கா. கோவிந்தன் நாடு காவல் குறித்துப் பிரியும் தலைவன், இளவேனிற் பருவத்து மீள்வன் எனக் கூறிப் பிரிந்தானாக, அப்பருவம் வரவும் அவன் வாராமை கண்டு வருந்திய தலைவிக்கு, அவர் வருவர் எனக் கூறித் தோழி ஆற்றுவித்தது. 1. ஒருகுழையொருவன் - பலதேவன்; இணர் - பூங்கொத்து: மராஅம் - வெண்கடம்பு2. பருதியம் செல்வன் - ஞாயிறு, நனை - அரும்பு, ஊழ்த்த - மலர்ந்த 3. மீனேற்றுக் கொடியோன் - காமன்; மிஞ்று- வண்டுகள்:4. ஏனோன்- தம்பி, காமன் தம்பி சாமன், கிளர்பு - விளங்கி, களுலிய - பூக்கள் நெருங்கிய; 5. ஆனேற்றுக் கொடியோன் - சிவன்; எதிரிய- காலத்தை எதிர்நோக்கி மலர்ந்த, 7. பொருகரை - நீர் அலைக்கும் கரை, இளவேனில், நோதக, மேதக வந்தன்று என மாற்றி, கணவனைப் பிரிந்தார் வருந்தவும், கணவனோடு வாழ்வார் மகிழவும் இளவேனில் வந்தது எனப் பொருள் கொள்க.9. புதிது-புதிய தேன்; 10. ஒல்குபு- ஆள்வோரால் அலைக்கப் பெற்று; உலையாது- அவர் வருந்தாவாறு; 12. விருந்து நாடு- புதிய நாடு, 13. தேன் - தேனீக்கள்; திருமருத முன்துறை - வையை ஆற்றின் அமைந்த திருமருதத்துறை, 14 வசைதீர்ந்த குற்றம் அற்ற, 13. நசைகொண்டு - தன்னை விரும்பி, 17. அறல் - சிறுக ஒடும் அருவி, சாஅய் - நீர் ஓடுதல் அற்றுப்போன, 18. திறல் சான்ற - பெருமைமிக்க: 19. ஊறு - கேடு, 20. வெஃகி அகன்றவெஃகிய அரசன் அகன்ற தாழிசைகளில், உள்ளுவார், அருளுவார் என்பனவற்றை ஐய வினாக்களாகக் கொண்டு, உறைபவர் உள்ளுவரோ? உறைபவர் அருளுவாரோ? எனக் கொண்டு கூட்டிப் பொருள் செய்து கொள்ளுக. 22 தெருமரல் - மனம் கவலாதே; பொரு முரண் - போர் செய்யும் மாறுபாடு; எழுந்தவர் செரு மேம்பட்ட - எழுந்த பகைவரோடு மேற்கொண்ட போரில், மேன்மை யுற்ற வென்றியராய் வரும் என அவர் வாய்மொழித் தூது வந்தன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/195&oldid=822204" இலிருந்து மீள்விக்கப்பட்டது