பக்கம்:பாலைச்செல்வி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இ. புலவர் கா. கோவிந்தன் தோழி, பகைவரை வென்று வீறுகொள்ளும் தன் தேரை விரைந்து செலுத்தி, அவள் காதலன் ஊர் திரும்பியதையும், ஊர் திரும்பியவன், சென்ற ஆண்டுகள் போல், பரத்தையர் சேரி தேடிப் போகாது, தங்கள் மனைக்கண்ணே வந்து நிறுத்தியதையும் கண்டு மகிழ்ந்து, அவ்வருகையை, அவளுக்கும் காட்டி, அவள் துயர் துடைத்து அக மகிழ்ந்தாள். "ஈதலிற் குறைகாட்டாது அறன்.அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம்போல் தீங்கரை மரம்நந்தப், பேதுறு மடமொழிப் பிணைஎழில் மான்நோக்கின், மாதரார் முறுவல்போல் மணமெளவல் முகை ஊழ்ப்பக், காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப்போல், கழல்குபு 5 தாதொடும் தளிரொடும் தண்ணறல் தகைபெறப் பேதையோன் வினைவாங்கப் பீடிலா அரசன்நாட்டு ஏதிலான் படைபோல இறுத்தந்தது இளவேனில்; நிலம்பூத்த மரமிசை நிமிர்புஆலும் குயில்எள்ள - நலம்பூத்த நிறம்சாய நம்மையோ மறந்தைக்க; 10 கலம்பூத்த அணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்ஆனாக் கூடலும் உள்ளார்கொல்? கல்மிசை மயில் ஆலக் கறங்கிஊர் அலர்துற்றத் தொன்னலம் நனிசாய நம்மையோ மறந்தைக்க, ஒன்னாதார்க் கடந்தடுஉம் உரவுநீர் மாகொன்ற 15 வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார் கொல்? மையெழில் மலர்உண்கண் மருவூட்டி மகிழ்கொள்ளப் பொய்யினாற் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/201&oldid=822211" இலிருந்து மீள்விக்கப்பட்டது