பக்கம்:பாலைச்செல்வி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 199 தைஇய மகளிர்தம் ஆயமோ டமர்ந்தாடும் . வையவார் உயர்எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்? 20 எனவாங்கு, நோய்மலி நெஞ்சமொடு இனையல்; தோழி! 'நாமில்லாப் புலம்பாயின், நடுக்கம்செய பொழுதாயின், காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிது’ என எம்உறு கடுந்திண்தேர் கடவி 25 நாம்அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே." இளவேனிற் பருவம் வரவும், தலைவன் வாராமை கண்டு வருந்திய தலைவிக்குத் தோழி அவன் வரவுணர்ந்து கூறி மகிழ்ந்தது இது. 2. தீங்கரை - இனிய நீரை உடைய ஆற்றங்கரை, நந்த - தழைக்க, 3. பேதுறு - கேட்டார் அறிவை மயக்கும்; பிணைஎழில் - மான்பினை போலும் அழகுடைய, 4. ஊழ்ப்ப - அலர; 5. கதுப்பு - கூந்தல்; குழல்குபு - கழன்று உதிர்ந்த, 7. பேதையோன்- அறிவிலா அமைச்சன்;8. ஏதிலான்- பகைவன் இறுத்தந்தது- வந்து தங்கிற்று; 9. நிமிர்பு- செருக்குற்று, ஆலும்- மகிழ்ந்து ஆரவாரிக்கும்;10. மறந் தைக்க - மறக்குக: 11. கலம்பூத்த அணிகளால் அழகு பெற்ற ; 12. புலம் பூத்து- அறிவால்மிக்கு புகழ்பு ஆனா-புகழ் குறையாத 13. கல்மிசை - மலைமேல்; கறங்கி- பேரொலி செய்து 15. ஒன்னாதார் - பகைவர்; கடந்து அடுஉம் - வென்று அழிக்கும்; உரவு நீர்மா - கடலிடையே நின்ற மாமரம், 18. புரிவுண்ட - அன்பு கொண்ட, 19. தைஇய - ஆடை அணிகளால் அழகு செய்து கொண்ட 22. நோய்மலி - நோய்மிக்க, இனையல் - வருந்தற்க; நாமில்லாப் புலம்பாயின் - நாம் இன்றித் தனித்து வருந்துவளாயின்,25. ஏம் உறு - பகைவர்க்கு அச்சம் தரும்;26. துணை தந்தார்-துணையாக வந்து சேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/202&oldid=822212" இலிருந்து மீள்விக்கப்பட்டது