பக்கம்:பாலைச்செல்வி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 வேண்டா தூது! மக்கள் உள்ளத்தை மகிழ்ச்சி வெள்ளத்துள் ஆழ்த்தும் வேனிற்காலம் வந்துவிட்டது. வையையாற்றின் கரைக்கண் மரங்கள் தளிர்விட்டு மலரத் தொடங்கி விட்டன. மதுரை மகளிர் கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ முதலாம் மலர்களைத் தேடிச் சென்று அலையா வாறு, அவர் விரும்பும் மலர்களைக் கண்ணி போலவும், கைச் செண்டு போலவும் கட்டித் தருவனபோல் கொத்துக் கொத்தாகப் பூத்துத் தந்தன, தாழ்ந்த அம்மரக்கிளைகள். வையை யாற்றின் கரைவளர் மரங்களின் வனப்பு இது என்றால், இவ் வையை யாற்றின் இடைநிலைக் காட்சி, அதனினும் இன்பம் மிக்கது. ஆற்றின் இடையே, திருமகள் மார்பிற் கிடந்து மாண்பு தரும் முத்தாரம் போல், பளிங்கெனத் தெளிந்த நீர் கொண்டு ஓடிற்று அருவி. அவ்வருவி ஊடறுத்து ஓடுவதால் வளையம் வளையமாக ஒதுங்கிக் கிடந்த கருமணலுக்கு இடையிடையே, செம்மண் குழம்பு தோய்ந்து தோன்றும் காட்சி மகளிரின் கருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/203&oldid=822213" இலிருந்து மீள்விக்கப்பட்டது