பக்கம்:பாலைச்செல்வி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இல் புலவர் கா. கோவிந்தன் - பொறுத்தலும், அத்துயரைப் பிறர் அறியாவாறு காத்துத் தம் மனத்தகத்தே நிறுத்தலும், பெண்டிர்பால் நீங்காது நிற்றல் வேண்டும் என அறிந்தவள் அத் தோழி. அதனால், தன் கணவன் பிரிவு கண்டு வருந்தி, அவ் வருத்தம் பிறர்க்குப் புலனாகுமாறு வாடி நிற்கும் அப் பெண்ணை நோக்கிப், "பெண்ணே, நாள் முழுதும் அவனையே நினைந்து நினைந்து, நின் நஞ்சை அவன்பின் அலைய விடுதல் அழகாகாது. அதை அடக்கி ஆளுதலே அறிவுடைமை. நின் மனத் துயரைப் பிறர் அறியாவாறு மறைத்துக் காத்தல் வேண்டும். அதுவே, மகளிர்க்கு மாண்பு!” என அறிவுரை கூறித் தேற்றத் தொடங்கினாள். அவள் அறிவுரை கேட்ட அப் பெண், "தோழி! நம்மைப் பிரிந்து சேணெடுந் தூரம் சென்று வாழும் நம் காதலர்ப் பின் சென்ற என் நெஞ்சினை, நீ கூறும் அளவிற்கு மேலும் அடக்கி ஆளுதல் என்னால் இயலும். ஆனால், வாய் விரிந்தும், பனித்துளி ஏற்றும் மணம் நாறும் மலர்களிற் படிந்து பிரிந்தார்க்குப் பெருந்துயர் செய்யும் இவ்விளவேனிற் பருவத்தே ஈங்கு வந்து வீசும் வாடைக் காற்று, என் வருத்தத்தை மிகுத்து, அடக்கி ஆளும் என் ஆற்றலை அழித்துச் செல்கின்றதே, அதற்கு யான் என் செய்வேன்? தோழி! இருந்து இன்பம் துய்க்க வேண்டிய இளவேனிற் பருவம் இது என எண்ணாது, பிரிந்து சென்று மறந்து வாழும் நம் காதலர்பால் கொண்ட அன்பின் மிகுதியால் வாடும் என் வாட்டத்தைப் பிறர் அறியாவாறு மறைத்து வாழ்தல் என்னால் இயலும். ஆனால், மலை வாயிலில் வீழ்ந்து மறையும் மாலை ஞாயிற்றின் ஒளி பெற்று மலர்ந்த மலரகத்துத் தேனை உண்ணத் தேடித் திரியும் வண்டுகள் எழுப்பும் யாழ் ஓசை போலும் இனிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/211&oldid=822222" இலிருந்து மீள்விக்கப்பட்டது