பக்கம்:பாலைச்செல்வி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 209 இசை, பிரிந்தாரைத் துயர் செய்யும் மாலைக் காலத்தே வந்து, துயர்மறைத்து வாழும் என் உள்ளத்துணிவின் உரன் அழித்துச் செல்கின்றதே, அதற்கு யான் என் செய்வேன்? தோழி! துயர்மிகுந்து, தொடிகழலுமாறு, தோள்நெகிழ்ந்து போகத் துயர் செய்து போன நம் காதலருயிரோடு ஒன்றி விட்ட என் உயிரை, அவ்வாறு ஓடி ஒன்றிவிடாது கட்டிப் பிடித்துக் காத்தல் என்னால் இயலும். ஆனால், நெடுந் தொலைவில் உலாவும் நிலா, திறந்து உண்ணுவான் வேண்டி, மூடிக் கிடந்த இதழ்கள் வாய்விட்டு மலர்ந்த மலர்களின் மணம், தனித்துக் கிடப்பாரைத் துயர்க்கு உள்ளாக்கும் இரவுக் காலத்தே வந்து, வருத்தி, உயிரைக் கட்டிப் பிடிக்கும் என் ஆற்றலை அழித்து அலைக்கின்றதே, இதற்கு யான் என் செய்வேன்?" எனக் கூறி, வாடைக் காற்றும், வண்டோசையும் மலர் மணமும் இளவேனிற் காலத்து இன்பத்தினை நினைப்பூட்டுவதால், அவனை நினைந்து வருந்தும் தன் வருத்தம், அடக்கி ஆளும் தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டு விட்டது என அறிவித்து வருந்தினாள். அது கேட்ட தோழி, அப்பெண்ணின் வருத்தத்தைப் போக்க வல்லது அவன் வருகையேயல்லது, தன் அறவுரை யன்று என்பது உணர்ந்தாள். அதனால், சென்றவன் விரைந்திவண் வாரானோ என வருந்தி, அவன் வரும் வழி நோக்கி நின்றாள். அந்நிலையில், ഞെക്കുഖങ്ങണ கழன்று கலங்குமாறு காதலியைக் கைவிட்டுச் சென்ற அவன், அவள் பல்லழகும், அப் பற்களிடையே எழும் தேன் போலும் சொல்லழகும் நினைந்து, அந்நினைவு மிகுதியால், சோம்பியிருப்பதோ, தளர்ந்து பின்னிற்பதோ செய்யாது, விரைந்து முன்னேறிச் சென்று, எடுத்த வினையை பாலை-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/212&oldid=822223" இலிருந்து மீள்விக்கப்பட்டது