பக்கம்:பாலைச்செல்வி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இ புலவர் கா. கோவிந்தன் விரைந்து முடித்து மீண்டு வந்தான். வருவானைத் தெருக் கோடியில் வரும்போதே கண்டு கொண்ட தோழி, உள்ளே ஒடிப், "பெண்ணே! நின் துயர் துடைப்பான் வேண்டி அவரும் வந்துவிட்டார். விரைந்திவண் வந்து வரவேற்பாயாக!” எனக் கூறி அழைத்துச் சென்று காட்டி அகம் மகிழ்ந்தாள். "தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கைபோல், பல்பயம் உதவிய பசுமைதீர் அகன்ஞாலம் புல்லிய புனிறுஒரீஇப், புதுநலம் ஏர்தர வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள, 5 இளையவர் ஐம்பால்போல் எக்கர்போழ்ந்து அறல்வார, மாஈன்ற தளிர்மிசை மாயவள் திதலைபோல் ஆயிதழ்ப் பன்மலர் ஐயகொங்கு உறைத்தர, மேதக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்: சேயார்கண் சென்றஎன் நெஞ்சினைச், சின்மொழி! 10 நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன், நிறைநீவி, வாய்விரிபு, பனிஏற்ற, விரவுப்பன் மலர்தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடைவந்து அலைத்தரூஉம்; போழ்துஉள்ளார் துறந்தார்கண் புரிவாடும் கொள்கையைச் சூழ்பு ஆங்கே, சுடரிழாய்! கரப்பென்மன்; கைநீவி 15 விழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணும் இருந்தும்பி யாழ்கொண்ட இமிழிசை இயன்மாலை அலைத்தரூஉம்; தொடிநிலை நெகிழ்ந்தார்கண் தோயும்என் ஆருயிர் வடுநீங்கு கிளவியாய்! வலிப்பென்மன்; வலிப்பவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/213&oldid=822224" இலிருந்து மீள்விக்கப்பட்டது