பக்கம்:பாலைச்செல்வி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 211 நெடுநிலாத் திறந்துண்ண நிரைஇதழ் வாய்விட்ட 20 கடிமலர் கமழ்நாற்றம் கங்குல்வந்து அலைத்தரூஉம்; எனவாங்கு, வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப் பிரிந்துசெய் பொருட்பிணி பின்நோக்காது எகி, நம் அருந்துயர் களைஞர் வந்தனர், 20 திருந்துஎயிறு இலங்கும்நின் தேமொழி படர்ந்தே.” இளவேனிற் பருவங் கண்டு ஆற்றாத தலைவியைத், தோழி ஆற்றுமாறு கூற, அவள் ஆற்றமாட்டாமை அறிவிக்கத் தோழி அவன் வரவுணர்ந்து உவந்து கூறியது. 1. தொல்லெழில் - பண்டைப் பேரழகு வயவு - கருவுற்ற மகளிர்க்கு உண்டாகும் வேட்கை நோய், நலிதல் - வருத்துதல்; 2. அல்லாந்தார் - அவள் நோய் கண்டு வருந்திய சுற்றத்தார்;4. புல்லிய - பற்றிய புனிறு - மகளிர்க்குக் கருவுயிர்த்த காலத்து உண்டாம் தூய்மைக் குறைபாடு ஒரீஇ தீர்ந்து ஏர்தர அழகுண்டாக, 5. வளையவர் - சில்வளையிடும் இளைய மகளிர்; வண்டல் - மணல் வீடு கட்டி ஆடும் ஆடிடம்; வடு மாவடு, 6. எக்கர் - ஆற்றுநீர் கொண்டுவிட்ட மணல்மேடு, போழ்ந்து - பிளந்து பாய்ந்து 8. -ஜயகொங்கு - நுண்ணிய மகரந்தப் பொடிகள், உறைத்தர- உதிர; 12. விரிபு- விரிந்து 13. நோய் சேர்ந்த-வைகல்-துன்பம் தரும்-- இளவேனில்: 14. போழ்து - இளவேனிற் காலம்; உள்ளார் - நினையார், புரிவாடும் - மனம் விரும்புவால் வாடும்; 15. சூழ்பு - வாடுதல் நன்றன்று என்பதை எண்ணி, 16. வீழ்கதிர் - மறையும் ஞாயிற்றின் ஒளி;விடுத்த-மலர்த்திய, 17. இயன்மாலை - ஒலிக்கும் மாலைக்காலம் 18. தோயும் - படியும், வலிப்பென் - போகாவாறு தடுத்து நிறுத்துவன்; 20. வாய்விட்ட - மலர்ந்த 21. கங்குல் - இரவு: 24. பின்னோக்காது ஏகி - விரைந்து தொழிலாற்றி, 24: களைஞர் - போக்குதற் பொருட்டு;25. எயிறு - பற்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/214&oldid=822225" இலிருந்து மீள்விக்கப்பட்டது