பக்கம்:பாலைச்செல்வி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 நடுங்கினள் பெரிது! அவனோர் அரசன். பேரரசு அமைத்து ஆளும் பேராசை உடையவன். அவ்வாசை நிறைவேறாவண்ணம், பகைவர் யாரேனும் பணியாது பகைத்து நிற்பரேல், அவரை வென்று அடிபணிய வையாது மீளாப் பெரும் படையுடையவன். அது முடியுங்காறும், பாசறையே அவன் வாழ்விடமாம். இவ்வாறு போர் வேட்கை யுடையனாதலோடு, பிறிதொரு பண்பும் அவன்பால் பொருந்தியிருந்தது. தன் நாட்டை விடுத்துப் பகைநாடு புகுந்து பாசறை வாழ்வு மேற்கொண்டு வாழும் அவன், ஆங்குத் தன் உடன் வந்து, ஆடல் பாடல்களால் தன் உள்ளத்திற்கு அமைதியும் ஆனந்தமும் அளிப்பதாரும், தன்பால் பேரன்புடையாரும், தன்னையல்லது வேறு ஆடவரை அறியாதாருமாய ப்ரத்தையரோடு மகிழ்ந் துறையும் ஒழுக்கமும் அவன்பால் பொருந்தியிருந்தது. ஆனால், இவ்வாழ்வு, அவன் வாழ்க்கையில் எப்பொழு தேனும் ஒரு சில காலங்களில் மட்டுமே காணப்படுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/215&oldid=822226" இலிருந்து மீள்விக்கப்பட்டது