பக்கம்:பாலைச்செல்வி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஆ 213 தல்லது, எப்பொழுதும் பாசறை, பரத்தையர் என்றே இருந்து விடுவானல்லன். எழில் மிக்க தன் இளம் மனைவிபால் இணையிலா அன்பு கொண்டு வாழும் மனையற மாண்பையும் அவன் உணர்ந்திருந்தான். அதனால், மேற்கொண்டு செல்லும் வினை முடிந்த பின்னர், ஆண்டு ஒருபொழுதும் நில்லாது, அப்பொழுதே விரைந்து வீடு சேர்ந்து மனைவியை மகிழ்விப்பன். அவனைப் போன்றே அவன் மனைவியும் அவன்பால் குன்றா அன்பு கொண்டிருந்தாள். அது மட்டுமன்று. அரசர்க்குரிய கடமை இது, இவ்வரசர்க்கு மனைவியாக வந்து வாய்ப்பார்க்கு உரிய கடமை இது என்பனவற்றை உணர்ந்த பேரறிவும் உடையவள். அதனால், தன் கணவன், பகைவர் நாட்டைப் பாழ் செய்யும் பணி மேற்கொண்டு பிரிந்து வாழ்வதை, ஒருவாறு தாங்கிக் கொள்ளும் உள்ளுறுதி பெற்றிருந்தாள். பாசறை வாழ்வில், இரவிலும், பகலிலும் எந்நாழிகையிலும் போர் பற்றிய எண்ணமே உடையனாய், அமைதி இழந்து கிடக்கும் அவன், தன் உள்ளத்திற்குச் சிறிது ஆறுதல் வேண்டி, ஆடல் மகளிரின் ஆடல் பாடல்களில் அறிவு மயங்குவதோ, அவரோடு ஆடி மகிழ்வதோ பெரும் பிழையாகாது. அதனால், என்பால் கொண்டுள்ள அவன் அன்பு குறைந்து விடாது எனக் கொள்ளும் குணநலனும் உடையவள் அப்பெண். இத்தகைய எழில்மிக்க, இனிய இயல்புடையாளைப் பிரிந்து, அவன் பகை மேற்சென்றிருந்தான். சென்றவன் திங்கள் பல ஆகியும் திரும்பி வந்திலன். இந்நிலையில் இளவேனிற் பருவம் வந்து விட்டது. மரங்களெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/216&oldid=822227" இலிருந்து மீள்விக்கப்பட்டது