பக்கம்:பாலைச்செல்வி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 215 இட்டதை அறிந்திரான். அதனாலேயே அவன் வந்திலன் எனக் கருதினாள். அதனால், அவனுக்கு அப் பருவம் வந்து விட்டமையினை அறிவிப்பர் யாரேனும் உளரேல் நன்றாம் என நினைந்தாள். அந்நிலையில் அவள் மனை புகுந்தான் பாணன் ஒருவன். அவள் கணவனின் இன்ப நுகர்ச்சிக்குப் பெருந்துணை புரிவானும், பாடிப் பிழைக்கும் வழக்குடையானுமாய அப் பாணனைக் கண்டவுடனே, வேற்று நாடு சென்று வாழ்வார்க்கு வேனிற் பருவ வருகையினை அறிவிக்க ஏற்றவன் அவனே என உணர்ந்தாள். உடனே அவனை அழைத்துப், "பாண ! நின் தலைவர், என் கணவர், அவருட னிருந்து இன்பம் நுகரவல்ல இனிய வாய்ப்பினைப் பெற மாட்டாமையால், யான் உறக்கம் அற்று, இரவின் இடையாமத்தும் தனித்துக் கிடந்து துயர் உறவும், அத்துயர் மிகுதியால், என் உடல் ஒளி இழந்து வருந்தி வாடவும் என்னை விடுத்து மறந்து சென்று, மயில்போலும் சாயலும், பனையின் எழிலும், அணையின் மென்மையும் வாய்ந்த தோள்களும், மான் போலும் மருண்ட பார்வையும், விலை மதிக்க வொண்ணா அணிகளும் உடையராய், இயற்கை செயற்கைகளானாய இருவகை அழகாலும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பரத்தையர் பின் சென்று, புதுப்புனலாடியும், வேனில் விழாக் கண்டும் மகிழ்ந்து வாழும் மாண்பிலார் என்பதை அறிந்தும், அவர் நட்பையே நாடுகிறது என் உள்ளம். அவர் வருகையை எதிர் நோக்குகின்றன என் விழிகள். ஆனால், அவரோ வந்திலர். வேனிற் பருவமோ வந்து விட்டது. அது வந்து விட்டதை அவர் அறிந்திலர் என்றே யான் எண்ணு ன்ெmேன். அதனால், அவர்பால் சென்று, 'அன்ப!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/218&oldid=822229" இலிருந்து மீள்விக்கப்பட்டது