பக்கம்:பாலைச்செல்வி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இ. புலவர் கா. கோவிந்தன் வெய்யிலின் ஒளியும் உட்புகாவாறு மலர்களால் நிறைந்து மணம் நாறும் மலர்ச் சோலையிலிருந்து குயில்கள் கூவும் இளவேனிற் பருவமன்றோ இது? குறையாத புகழ் கொண்ட நம் கூடல் மாநகரின் நெடிய தெருக்கள் அரும்பற மலர்ந்த முல்லை மலர்களின் மணத்தால் நிறையும் இளவேனிற் காலமன்றோ இக்காலம்? ஆற்றிடைக் குறையில் மரங்கள் மலர்களால் நிறைந்து மாண்புற்றுத் தோன்ற, அவ்வழகை மேலும் அழகுடைய தாக்குமாறு தெளிந்த நீர் ஒழுகும் அருவிகள், அவ்வாற்றிடைக் குறையைச் சூழ்ந்தோடும் இளவேனிற் பருவமன்றோ இது? என எடுத்துக் கூறுவார் யாரேனும் உளரேல் நன்றாம். அவர் செய்ந்நன்றியை யான் என்றும் மறவேன். அவரால், இளவேனிற் பருவம் இஃது என அறிந்து வரும் என் கணவர், ஈண்டு வந்தும், என் மனையகத்தே வாழாது, என்னை மறந்து, அவர் விரும்பும் அப் பரத்தையர் பின் சென்று விழாக் கண்டு மகிழினும் கவலேன். அவர் வரக் காணின் அதுவே எனக்கு ஆறுதலாம். அதனால் அமைதியுறும் என் உள்ளம். ஆனால் அவ்வாறு சென்று கூறுவார் யாரையும் கானேனே! என் செய்வேன்?” என்று கூறிக் கலங்கினாள். அவள் கூறியன கேட்டான் பாணன். அவள் அன்பின் பெருமையும், அகத் துயர்க் கொடுமையும் அறிந்தான். அவள் நிலைக்கு இரங்கினான். அந்நிலையே அவண் நில்லாது அவள் கணவன் சென்ற நாட்டிற்குச் சென்று, ஆங்கு, அவன் தங்கியிருக்கும் பாசறை அறிந்து, உட்புகுந்தான். புகுந்து அவன் அடிபணிந்து, "நின்னைப் பணியாது பகைத்து நின்ற பகைவர், நின் படையால் பாழுற்றுத் துடிக்கும் துன்ப நிலை கண்டு மகிழும் எம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/219&oldid=822230" இலிருந்து மீள்விக்கப்பட்டது