பக்கம்:பாலைச்செல்வி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 217 தலைவ! இப் பகைவரே போல் வருந்துவாள் ஒருத்தியை நம் ஊரில் கண்டேன். அவளை வருத்தினார் வேறு எவரும் இல்லை. அவளை வருத்தியோனும் வருத்து வோனும் நீயே! அவ்வாறு நின்னால் நின் பகைவர் போல் வருந்துவாள் நின்னை விரும்பாதவளோ, நின்னால், வெறுக்கப்பட்டவளோ அல்லள்! நின் ஆருயிர் மனைவியே அவ்வாறு வருந்துகிறாள்! நின்னைப் பெற மாட்டாது, நின் அன்பைப் பெறமாட்டாது, காமநோயால் கலங்கி வாடுறாள் அவள். அன்ப! அவளை அவ்வாறு வருந்த விடுவது நின் அன்புள்ளத்திற்கு அழகன்று. பகைவரை அழ விடுதல் ஆண்மை. ஆனால் பேரன்புடை யாளை அழ விடுதல் ஆண்மையன்று என்பது மட்டுமன்று; அஃது அறமும் ஆகாது. தன் அவல நிலை நீங்கி, அவள் அழகு பெற்று அகம் மகிழுமாறு, நின் அழகிய தேரை, இன்றே ஊர் நோக்கித் திருப்புவாயாக!” என வேண்டிக் கொண்டான். - “அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சிபோல் அணிகொள, விரிந்துஆனாச் சினைதொறுTஉம் வேண்டும்தாது அமர்ந்து புரிந்தார்க்கும் வண்டொடு புலம்புதீர்ந்து எவ்வாயும் (ஆடிப் இருந்தும்பி இறைகொள எதிரிய வேனிலான்: துயிலின்றி யாம்நீந்தத் தொழுவையம் புனலாடி 5 மயில்இயலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ வெயில்ஒளி அறியாத விரிமலர்த் தண்காவில் குயில்ஆலும் பொழுதுஎனக் கூறுநர் உளராயின், பானாள்யாம் படர்கூரப் பணைஎழில் அணைமென்தோள் மானோக்கி னவரோடு மறந்துஅமைகு வான்மன்னோ 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/220&oldid=822232" இலிருந்து மீள்விக்கப்பட்டது