பக்கம்:பாலைச்செல்வி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 புலவர் கா. கோவிந்தன் ஆனாச்சீர்க் கூடலுள் அரும்பவிழ் நறுமுல்லைத் தேன்.ஆர்க்கும் பொழுதுஎனத் தெளிக்குநர் உளராயின்; உறலியாம் ஒளிவாட, உயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரொடு விளையாடு வான்மன்னோ பெறலரும் பொழுதோடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்து 15 அறல்வாரும் வையைஎன்று அறையுநர் உளராயின்; எனவாங்கு, தணியாநோய் உழந்துஆனாத் தகையவள் தகைபெற அணிகிளர் நெடுந்திண்தேர் அயர்மதி, பணிபுநின் காமர் கழல்அடி சேரா 20 நாமம்சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே.” வேனிற் பருவ வரவின்கண், தலைவி, எம்மாட்டு அன்பிலாராயினும், இளவேனிற்பருவம் இஃது என அவர்க்கு உரைப்பார் உளரேல் பரத்தையரொடு கூடி மகிழும் விளையாட்டைக் கருதியாவது வருவர்!" எனக் கூறி வருந்தக் கண்ட பாணன், பாசறை புகுந்து தலைவனைக் கண்டு கூறியது. - 1. விரிந்து- மலர்ந்து ஆடி - உண்டு, 3. புரிந்து - விரும்பி, புலம்பு-தனிமை, எவ்வாயும்- எங்கும்;4. இருந்தும்பி- கரியதும்பி; இறைகொள - தங்க; தொழுவை - நீர்நிலை; 9. பானாள்இடையாமம், படர்கூர - துன்பம்மிகுமாறு: பணை - மூங்கில்; அணை - தலையணை; 11. ஆனார்சீர்க் - கூடல்; புகழால் மிகுந்த மதுரை; 12. தேன் - தேனீக்கள்; 13. உறலியாம் - அவனை அடைதற்குரிய யாம்; 15. பிறங்கு - பெருமை மிக்க; 16. அறையுநர் - சொல்லுவார்; 18. தகையவள் - தகுதியால் மிக்கவள் நகை பெற - அழகு பெறும்படி 19. அயர்மதி - செலுத்துவாயாக, 21 தெவ்வர் - பகைவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/221&oldid=822233" இலிருந்து மீள்விக்கப்பட்டது