பக்கம்:பாலைச்செல்வி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கூடல் புகுந்தார்! "$circrrté தெறுபொருளும் வேந்தன் பொருள்” என்றார் வள்ளுவர். தம் நாட்டு மக்களின் நல்வாழ்விற்குப் பிறர் நாட்டு வளங்களை வாரிக் கொணர்தல் வல்லரசு களின் வழக்கமாம். அத்தகைய பேரரசர் வழிவந்த அரசன் ஒருவன் தன் நாட்டு எல்லைக்கண் உள்ள நாடுகளை வென்று, தன் நாட்டு எல்லையை விரிவாக்கவும், அந் நாட்டுச் செல்வங்களைக் கைப்பற்றிக் கொணரவும், பகைநாட்டு அரசரெல்லாம் தன் பேராண்மை கண்டு பணிந்து ஏவல் கேட்கவும் விரும்பினான். அது தன் விருப்ப மாதலோடு, அரசர்க்குரிய அறமுமாம் என்பதறிந்தான். அதனால், தன் ஆருயிரனைய மனைவியை, தன் அன்பே துணையாய் உயிர் வாழும் உயர்வு உடையாளைப் பிரிந்து போகத் துணிந்தான். அவன் முடிவறிந்து வருந்தினாள், அவன் மனைவி. வருந்தி நிற்பாளின் விழிநீர் துடைத்து, 'அன்பே ! இது வேந்தர்க்குரிய கடமை. இக் கடமையில் வழுவுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/222&oldid=822234" இலிருந்து மீள்விக்கப்பட்டது