பக்கம்:பாலைச்செல்வி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இ. புலவர் கா. கோவிந்தன் அறமாகாது. நின் கணவன் அறநெறிபுகா அறிவிலி' என்ற பழிச்சொல் நினக்கு உண்டாதல் கூடாது. அது கருதியே செல்கின்றேன். சென்று சேணெடும் நாட்கள் இரேன். விரைந்து வினை முடித்து வந்து சேர்வேன். நகரெல்லாம் போற்ற நான் வரும் காட்சியை நீ கண்டு மகிழுமாறு, இளவேனிற் பருவத் தொடக்கத்தே வந்திவண் நிற்பன். கார் காலத்தும், கூதிர் காலத்தும் பெய்த பெருமழையால் பெருக்கெடுத்தோடும் ஆறுகள், அந்நீர் முற்றும் அறவே வற்றிப் போகத் தெளிந்து சிறு சிறு அருவிகளாக ஓடி அழகு பெறவும், நெடிய பல நீர் நிலைகளெல்லாம் நீர் குறைந்து நுண்மணல் பரக்கவும், இண்டைக் கொடிகளின் வாடிய மலர்கள் உதிர்ந்து அழகு செய்யவும், தம் கணவரைப் பிரிந்து, தனித்துக் கிடந்து துயர் கொள்ளும் மகளிரின் முகத்தில் படர்ந்த பொன்னிறப் பசலையின் நிறம் வாய்ந்த மலர்களை மலர்ந்தளித்த பீர்க்கங் கொடிகள் மலரும் பருவம் மாறி வாடவும், தம் கணவரைப் பிரியாதிருக்கப் பெற்ற பேரன்பு வாய்ந்த மகளிரின் மகிழ்ச்சி ததும்பும் முகம்போல், தாமரை மலரவும், பிறக்கும் இளவேனிற் பருவத் தொடக்கத்தே, முன்பனியும், பின்பணியும் கழிய வந்து நிற்கும் இளவேனிற் பருவத் தொடக்கத்தே, யானும் வந்து நிற்பன். வருந்தற்க!” என்றெல்லாம் கூறித் தேற்றிப் பிரிந்து சென்றான். - அரசர் குலத்து வந்த அவளும், அது அரசர்க்குரிய கடமையாதல் உணர்ந்து, ஒருவாறு உள்ளம் தேறி, அவனுக்கு விடை தந்து அனுப்பினாள். விடைதந்து அனுப்பி விட்டாளேனும், அவன் பிரிந்தவுடனே, தனிமை அவளைப் பெரிதும் வருத்திற்று. அவ் வருத்தத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/223&oldid=822235" இலிருந்து மீள்விக்கப்பட்டது