பக்கம்:பாலைச்செல்வி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஆ 221 ஒருவாறு தாங்கி உயிர் வாழ்ந்திருந்தாள். "பல படையும் இடைமயங்கும் கொடும்போர் நிகழும் களத்தின் நடுவே நின்று, பகையரசர்களை வென்று, அவர் நாட்டைக் கைப்பற்றி, அவ் வெற்றிப் புகழ் விளங்கப், பட்டத்து யானைமீது பவனிவரும் அவ்வழகிய காட்சியை, என் கண் குளிரக் காணும் நாள் எந்நாளோ? தன் அழகிய குதிரைமீதமர்ந்து, களம் புகுந்து, வந்த பகைவரைத் தன் வாட்படையால் வென்று, தன் ஆண்மையை, ஆற்றலை, அரும்போர்த் திறமையை அவர் அறியக் காட்டிவரும் என் கணவர் அழகைக் கண்டு அகமகிழும் அந்த நாள் எந் நாளோ? பகைவரை வென்று, அவர் பணிந்து தந்த திறைப் பொருளைக் கைக்கொண்டு, அப் பொருள்களோடும், பாய்ந்தோடவல்ல தேர்மீதமர்ந்து, உலா வரும் அச் சிறந்த காட்சியைக் கண்டு களிகரும் நாள் எந்நாளோ?” என அவள் உளத்தே எழுந்த வேட்கையும், அவன் வெற்றிப் புகழ் கேட்க விரும்பும் அவள் ஆர்வமும் பிரிவுத் துயரை ஒரு சிறிது மறக்கச் செய்ய, ஒரளவு மனந்தேறி வாழ்ந்திருந்தாள். ஆனால், முன்பனிக் காலத்து வாடையும், சிறு மழையும், பின்பணிக் காலத்துக் கடும் பனியும், அவள் பொறுமையை நிலைகுலையச் செய்தன. அதனால் அவள் துயர் மிகுந்தது. அஃதாற்றாது அவள் வருந்தினாள். அவள் துயர் கண்டாள் அவள் தோழி. அவள்பால் சென்று, "பெண்ணே, முன் பனிக் காலமும் பின் பனிக் காலமும் கழியவரும் இளவேனிற் பருவமன்றோ, வருவேன் என அவர் கூறிச் சென்ற காலம்? அவர் அக்காலத்தே நில்லாது வருவர். அவர் உரை பொய்யாகாது. ஆகவே, அதுகாறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/224&oldid=822236" இலிருந்து மீள்விக்கப்பட்டது