பக்கம்:பாலைச்செல்வி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 இ. புலவர் கா. கோவிந்தன் ஆற்றியிருத்தலே நின் பெண்மைக்கு அழகாவதல்லது, இவ்வாறு அழுது வாடுதல் அறிவுடைமை யாகாது. வெற்றிப்புகழ் விளங்க வரும் நம் தலைவரை, நகரை நன்கு அணி செய்து, நம் நகர் மக்கள் வரவேற்கும் அவ்வரவேற்புக் காட்சியைக் கண்டு மகிழக் கருதாது, கலங்கி நீர் சொளிவது நின் கண்ணிற்கும் அழகன்று!" என்று கூறித் தேற்றினாள். தன் வருத்த நிலை அறியாது, தன்னைத் தேற்ற முன் வந்து நிற்கும் தோழியை நோக்கித், "தோழி! நீ கூறியன யாவும் உண்மை. அவர் சொல் பிழைபடாது. கூறிச் சென்றவாறே, இளவேனிற் பருவத்தே அவர் வந்துவிடுவர். அதை நான் அறிவேன். அவர் வரும் அவ் வெற்றித் திருக் கோலத்தைக் கண்டு மகிழத் துடிக்கிறது என் உள்ளமும், அவ்வார்வ மிகுதியினாலேயே இதுகாறும் உயிர் வாழ்ந்தேன். ஆனால், காலத்தின் சூழ்நிலை என்னை வாழ விடவில்லையே யான் என் செய்வேன் உயிர்கள் அனைத்திற்கும் தன் ஒளியால் உரம் ஊட்டி வளர்க்கும் முழுநிலா உலா வரும் இரவுகள் என்னை வாழ விட்டனவா? அணிந்திருக்கும் அணிகளும் குளிர் மிகுதி யால் சில்லிட்டுப் போமாறு வீசிய வாடைக் காற்று, என்னை வாழவோ, அவர் வெற்றித் திருவுருவைக் காணவோ விட்டதா? நீண்டு வளர்ந்த கரும்பின் வெண்ணிறப் பூக்கள், தம் நிறம் கெட்டு வாடவும், குளிரால் நம் தோளும் மார்பும் நடுங்கவும் வந்து தூற்றிய மழைத்துரவல் நம்மை வாட்டாது வாழவிட்டதா 2 புதர்கள் மீது புகை படிந்தாற்போல் படிந்து தின்ற, பெண்களின் வெண்பல் வரிசை போல் தோன்றி, உள்ளே தேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/225&oldid=822237" இலிருந்து மீள்விக்கப்பட்டது