பக்கம்:பாலைச்செல்வி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஒ 223 தோன்றா-இளமையோடிருக்கும் மெல்லிய முல்லை அரும்புகளை, அவை முற்றி மலராதே, கருகிப்போமாறு கொடுமை செய்யும் இப் பின்பணிதான் முல்லை முகைகளை யொத்த என் பற்கள், குளிர் மிகுதியால் நடுங்கி, ஒன்றோடொன்று மோதிப் போமாறு செய்யும்இப்பின்பணிதான் என்னை வாழவிடுகிறதா? இவை ஒன்று கூடிச் செய்யும் இக்கொடுமைகளை, யான் ஒருத்தியாகவே நின்று தாங்கி, எவ்வாறு உயிர் வாழ்வேன்? அவர் வருகை யைக் காண வேண்டும் எனும் ஆர்வ மிகுதியால், ஒரளவு உரம் கொண்டு வாழும் என் உயிரைக், கூரிய பருவங்களின் கொடுமைகள் கொன்று விடுகின்றனவே! அக் கொடுமை களை அகற்றி ஆற்றி வாழ்தல் எவ்வாறு இயலும்?” என்று கூறி வருந்தினாள். அவ்வாறு வருந்து வாளுக்கு ஆறுதலாக உரைக்கலாம் உரையேதும் உணராதே, தோழி அவளை அவ்வருத்த நிலையிலேயே விடுத்து வெளியே சென்றாள். வீட்டை விடுத்து வெளியே வந்தவள், மதுரை மக்கள், வென்று மீளும் தம் மன்னன் வருகை குறித்து வெற்றிக் கொடிகளை நாட்டி மகிழும் காட்சியையும், தொலைவில், வென்ற வெற்றிப்புகழ்மிக்க வேற்படை வீரர் புடை சூழ்ந்து வர, வேந்தன் தேர் விரைந்து வருவதையும் கண்டாள். உடனே அகமும் முகமும் மலர, விரைந்து உள்ளே சென்று, "பெண்ணே அவர் வாராமை கண்டு வாழேன் யான். வாழ விரும்பினும் வாழ விட்டில இக் காலத்தின் கோலங்கள்! என்பன போலும் பயனில் சொற்களை, இனிச் சொல்லாதே. காலம் நீட்டிப்பின் கலங்குவை நீ எனக் கருதித், தாம் கூறிச் சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/226&oldid=822238" இலிருந்து மீள்விக்கப்பட்டது