பக்கம்:பாலைச்செல்வி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 231 பூவும் என்க: நெறிகொள - ஒழுங்காக வீழ்ந்து கிட்க்க; 6. துணிநீர்தெளிந்த நீர், 7. ஈர்பெய்யும் - எண்ணெய்ப்பசை கொண்ட, 8. அலர் செல்லா - பருவம் வருந்துணையும் அலராத, 9. புதல் - புதர்; 10. நல்லவர் - நல்ல மகளிர்; நுடக்கம் - அரங்கு ஆட்டம்; நயம்வந்த விரும்பத்தக்க, 11. இணர் ஊழ்த்த - மலர்க் கொத்துகளை ஈன்ற 14. பைதல் நோய் - வருத்தம் செய்யும் காமநோய், 16. ஏய்க்கும் - ஒக்கும்; 17. போது - மலரும் பருவத்தில் உள்ள பேரரும்பு குரற்கு - கூந்தலுக்கு 19. அயர்ந்தீகம் - விருந்தேற்றுப் போற்றுவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/234&oldid=822247" இலிருந்து மீள்விக்கப்பட்டது