பக்கம்:பாலைச்செல்வி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குயிலைப் பழியேல் மலைமேற்பெய்த மழைநீரைப் பெற்றுவந்து அளித்து விளைவித்தமையால், பிற நாடுகளில் இல்லாப் பெருவளம் பெற்ற பெருமை மிக்க தன் நாட்டின் பேரழகைக் காண விரும்பிய யாறு, தன் கண்களை அகல விரித்து நோக்கினாற் போல், அவ் யாற்றின் கரைக்கண் அமைந்த குளங்கள், நீராலும் மலர்களாலும் நிறைந்து மாண்புற்றன. பளிங்கு மணி போலும் தூய வெள்ளிய கண்ணாடிக் கிடையே, அழுத்தி இழைத்தது போல், அவ்வழகிய குளத்தின் தெளிந்த நீரில், கரைநிற்கும் முறுக்கின் மலர்கள், அரும்பற மலர்ந்து காம்பற்று உதிரலாயின. கயத்தின் கரைக்கண் நிற்கும் மரங்களெல்லாம், பல மணிகளை அணிந்து தோன்றுவது போல் மலர்ந்து நிற்கும் காட்சி, பளிங்கெனத் தெளிந்த அக்குளத்து நீரில் தோன்ற, ஆங்குத் தோன்றும் அந்: நிழலை, நிழல், என உணர மாட்டாத வண்டுகள், மரமும் மலருமாம் என மயங்க உணர்ந்து, ஒன்று கூடிச் சென்று மொய்த்து ஆரவாரித்தன. தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/235&oldid=822248" இலிருந்து மீள்விக்கப்பட்டது