பக்கம்:பாலைச்செல்வி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 233 விரும்பும் காதலரைப் பிரியாது பெற்று வாழ்வார், இடைவெளி யின்றி இணைந்து செல்லலாயினர். இத்தகைய இன்பச் சூழ்நிலையை உண்டாக்கும் இளவேனிற் பருவம் வந்து விட்டது. அக் காட்சிகளைக் கண்டாள் ஒரு பெண். அவ்விளவேனிற் பருவத்தே வருவதாக வாக்களித்துச் சென்ற அவள் கணவன் வந்திலன். அதனால் கலங்கிற்று அவள் உள்ளம், நிலப்பூவை நிகர்க்கும் அவள் கண்கள், நீரைச் சொரிந்து கலங்கி, அழுது அழகிழந்தன. அப் பெண் அவ்வாறு வருந்தி வாடியிருக்குங்கால், ஆங்கு வந்தாள் அவள் தோழி. தோழியைக் காணவே, அடங்கியிருந்த அவள் அழுகை உருப்பெற்றது. "தோழி! நெருப்பின் செந்நிறம் தோன்ற இலவம் மலர்ந்தது. நெற் பொரியின் வெண்ணிறம் விளங்கப், புன்கு பூத்து உதிர்ந்தது. பொன்னிறத் தாதுக்கள் உதிருமாறு புதிய பூக்களைக் கோங்கம் ஈன்றது. இளவேனிற் பருவத்து இவ்வினிய காட்சிகள், தனித்துக் கிடந்து துயர் உறும் எம்போலும் எளிய மகளிரைப் புறத்தே இழுத்துக் கொணர்ந்து எள்ளி நகைப்பது போல் உளதே ! இளவேனிற் பருவத்திற்கு எளியளாய்ப் போன என் அழகை அழித்து, அவ்வழகின் இடத்தைத் தான் கைப்பற்றி வருத்துகிறதே பசலை. வேனிலும் பசலையும் கூடி விளைக்கும் இக் கொடுமைகளைத், தோழி! யான் எங்ங்னம் ஆற்றுவேன்? "தோழி! அழகில் நமக்குத் தோற்று, நம் தாழ்நிலை கண்டு தருக்கி, நம்மை எள்ளி நகைக்கும் காலம் வாய்க்காமையால் வருந்திய மலர்க் கொடிகள், இவ்விள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/236&oldid=822249" இலிருந்து மீள்விக்கப்பட்டது