பக்கம்:பாலைச்செல்வி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 இ. புலவர் கா. கோவிந்தன் வேனிற் பருவத்தே அது வாய்த்தமையைப் பயன்கொண்டு, நம்மை நோக்கி, அழகிழந்த நம் தாழ்நிலை கண்டு, எள்ளி நகைத்தல் போல், மலர் ஈன்று மாண்புற்றன. மலர்க்கொடி மகிழுமாறு துயர்உறும் நம் நிலையினை எண்ணி எண்ணி உருக்குலைந்து உருகுகிறது என் உள்ளம். நம் சாயலுக்குத் தோற்ற மயில்கள், அச்சாயல், இப்பொழுது நம்மைவிட்டு அகன்றமை கண்டு அக மகிழ்ந்து, அம் மகிழ்ச்சியின் மிகுதியால், காலமல்லாக் காலத்திலும், தம் தோகை விரித்து ஆடி, நம்மை ஆறாத்துயர்க்கு உள்ளாக்குகின்றன. அது கண்டு கலங்கி நிற்கும் என்னைக் கைவிட்டு, என் கைவளைகளும் கழன்று ஒடுகின்றன. இக் கொடுமைகளை யெல்லாம் கண்டு என் கண்கள் கலங்கி நீர் சொரிகின்றன. இடைவிடாது ஒழுகும் என் கண்ணிர் போல், ஆறுகள் அறல் ஒழுகும் இவ் விளவேனிற் பருவத்தும் நம் கணவர் வந்திலர். அவர் வாராமையால், என் அகத்துறு துயரம் அளவின்றிப் பெருகுகிறதே, தோழி! யான் என் செய்வேன்? "தோழி! வேனிற் காலத்தே விரிந்த மலர்களில் நிறைந்து கிடக்கும் தேனைத் தேடிப் பறக்கும் தும்பிகள் எழுப்பும் இனிய யாழின் குரல், அதோ ஒலிப்பதை, நீ கேட்டிலையோ? அவ்வொலி, நம் காதலர் காதுகட்குக் கேளாதோ? அது கேட்டு அவர் வாராது போயினும், தம் வருகை உணர்த்தும் ஒரு தூதையும் அனுப்பிலரே! தோழி! தூதனுப்பவும் தவறிய அவர், நம்மை அறவே மறந்து துறந்து விடுவார்கொல் என்று அஞ்சுகிறது என் உள்ளம். இந்நிலையில், என் நிலை கண்டு இரங்கி வாயடைத்துக் கிடக்காது, கூவத் தொடங்கிவிட்டனவே குயில்கள்! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/237&oldid=822250" இலிருந்து மீள்விக்கப்பட்டது