பக்கம்:பாலைச்செல்வி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புலவர் கா. கோவிந்தன் கொண்டிலை. ஆனால், நீ செல்லும் வழியுண்டே அது, நின்னை மேலே செல்லாவாறு தடுத்து நிறுத்திவிடும். தம்மோடு நட்புக் கொண்டு வாழ்வார் ஒருவர், நெறி பிறழ்ந்து, நிலை திரிந்து விடுவராயின், அவர் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட நல்லோர் அவரை அடுத்து, அவர் விரும்பாது போயினும், இடித்துக் கூறி, அறிவுரை பல வழங்கி, அவரை நன்னெறிக்கண் நிறுத்துவர். அத்தகைய நல்லோர்போல், நினக்கு அறிவுரைத்து, நின்னை மேலே செல்லாவாறு நிறுத்தி, இவள்பால் மீளச் செய்யும் காட்சிகள் ஆங்குப் பல உள. வாய் திறந்து அறிவுரை வழங்கும் ஆற்றல் அவற்றிற்கு இராதாயினும், அவை, தம் காட்சி நலம் ஒன்றினாலேயே, நின் உள்ளத்தில் அவ்வறிவுரைகளைப் புகுத்திவிடும்." "அன்ப! நான் பலப்பல கூறித் தடுக்கவும் கேளாது, வினை ஆற்றும் வேட்கைமிக்க நின் நெஞ்சம் நின்று துரத்த, நீ செல்லும் வழியில் உள்ள சுனைகள், தாம் நீர் வற்றிப் போயினமையால், தம்கண் வளர்ந்து வனப்புத் தந்த தாமரை மலர்கள் இலைகளோடு ஒருங்கழிந்த காட்சியைக் காட்டி, மகளிர்க்குத், தாமரை மலர்க்குத் தண்ணிர்போல் இருந்து காக்கக் கடமைப்பட்ட கணவர், அவரைப் பிரிந்து சென்றுவிடின், தண்ணிர் அற்ற தாமரை வாடி அழிந்ததே போல், அவரும் அழிவர் என்ற உண்மையினை நின் உளங்கொள்ளச் செய்யும். அக் காட்சியைக் காணும் நீ, அவ்விடத்தைக் கடந்து செல்லுதல் இயலாது. அதைக் கடந்து செல்லும் உறுதி ஒருவாறு பெற்று மேலே செல்வையாயின், ஆங்குக் கோடையின் கொடுமையால் வாடிய மரம் ஒன்று, தன்னைப் பற்றுக் கோடாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/24&oldid=822253" இலிருந்து மீள்விக்கப்பட்டது