பக்கம்:பாலைச்செல்வி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 21 யாகாது என உணர்ந்தவன். அதனால், காதலை எண்ணிக் கடமையைச் சிறிது காலம் மறந்து வாழ்க!' என வேண்டிய தோழியின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாது, வினை மேற் செல்வதிலேயே விருப்பம் காட்டினான். கடனாற்றத் துணிந்து நிற்கும் அவன் உள்ள உறுதியை உணர்ந்தாள் தோழி. அவ்வுறுதி கண்டு ஒருபால் அவனைப் போற்றினாள். ஆனால், அவ்வுறுதியின் விளைவால், அவன் மனைவி அழிவளே என அஞ்சினாள். மேலும், கடமையுணர்ச்சி மேலோங்க நிற்கும் அவன், காதலின் இயல்பறியாக் கொடியன் அல்லன். வினைமேற் கொண்டு செல்லும் அவன், காதலர் இருவர் இணைந்து வாழ வேண்டிய இன்றியமையாமையினை, ஒருவர் பிரிய, ஒருவர் உயிர் வாழாக் கொடுமையினை, இடைவழியில் உணர்ந்துவிடின், மேற்கொண்டு சென்ற கடமையினையும் ஆற்ற மாட்டாது கலங்குவன் என்பதையும், அவன் செல்லும் நீண்ட வழியில், அத்தகைய நினைப்பூட்டும் நிகழ்ச்சிகள் மிகப் பலவாம் என்பதையும் உணர்ந்த அவள், அவன் அஃதறியாது சென்று, இவளை இழப்பதோடு, எடுத்த வினையினை முடிக்க மாட்டாது இடைவழியில் மீண்டு, மீளாப் பழியும் பெறுவனே என்றும் அஞ்சினாள். அதனால், மீண்டும் அவனை நோக்கி, "அன்ப! பிரிவுத் துயர் பொறாது இவள் வருந்தி வாட விடுத்துப் பிரிந்து போதல் பொருந்தாது என்பதைப் பணிவாகப் பலப்பல முறைகளில், உன் உள்ளம் ஏற்கும் வகையில், பன்னிப்பன்னிக் கூறினேன். அதை நீ ஏற்றுக்கொண்டிலை; நின்னைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் என் சொற்களுக்கு இல்லாது போயிற்று. நான் எவ்வளவு கூறியும் நீ ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/23&oldid=822242" இலிருந்து மீள்விக்கப்பட்டது