பக்கம்:பாலைச்செல்வி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 | நாள்வரை கடந்திலர் காதலர்! இளவேனிற் காலம் தொடங்கி விட்டது. மாரிக் காலத்தில் மழை பெய்த நீர், பலப்பல வாய்க்கால்களாய் வந்து கூடப் பெருகிப் பெரு வெள்ளமாய்ப் பாய்ந்து பரவி, உயிர்களுக்கு உணவும் உண்ணுநீரும் அளித்துப் புரந்த பேராறு தன் கண் நீரெலாம் வற்றிப் போகத் தெளிந்து ஒடும் சிறு சிறு அருவிகளை, ஆங்காங்கே உடையதாகி விட்டது. மாரிக் காலத்தில் அவ் வாற்றின் நீர் உண்டு வளர்ந்த, அவ்வாற்றின் கரைவாழ் மரங்கள், அந்நன்றியை மறவா மாண்புடைய போல், தம் கிளையிடத்து மலர்களை, அவ்யாற்று மணலில் உதிர்த்து அழகு செய்யத் தொடங்கி விட்டன. வருந்தி நிற்பார்க்கு வாரி வழங்கும் வள்ளலாய் வாழ்ந்த ஒருவர், பின்னர், அச் செல்வம் அற்றுப் போக வருந்திய காலத்தில், அவர்பால், அவர் செல்வ வாழ்வில் சிறந்திருந்த காலத்தில், பொருள் பெற்றுப் பிழைத்த நல்லோர் ஒருவர், அவர் செய்த அந்நன்றியை மறவாது, அவர்க்கு உறுபொருள் அளித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/241&oldid=822255" இலிருந்து மீள்விக்கப்பட்டது