பக்கம்:பாலைச்செல்வி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 239 உயிர் காக்கும் பெருஞ்செயலை, அவ்வியற்கைக் காட்சி நினைப்பூட்டக் கண்டு மகிழ்ந்தனர் மக்கள். அவ்வாறு மகிழ்ந்தாருள், ஒரு பெண், அந் நினைவால் சிறிது நேரம் தன்னை மறந்து இருப்பினும், அக்காட்சி, வேனிற் பருவத்தின் வருகை அது என்பதை நினைப்பூட்டவே, அவ் வேனிற் காலத் தொடக்கத்தே வருவேன் என்று கூறிச் சென்ற தன் காதலன், அங்ங்னம் வாராமை அறிந்து வருந்தினாள். "இயற்கையிடத்துக் காணும் இந்நன்றியறி உணர்வு, என் காதலன் மாட்டு இல்லையே! இளமைச் செல்வத்தைக் குறைவறப் பெற்றிருந்த காலத்தே, என் நலன் நுகர்ந்து, மகிழ்ந்து மாண்புற்ற அவன், அந் நலன் குறைந்து வருந்தியிருக்கும் இக் காலத்தே, தன் தலையளி யால், எனக்கு மகிழ்ச்சி தர மனம் கொண்டிலனே' என எண்ணி மனம் நெர்ந்தாள். வருந்தி நிற்கும் அவள் நிலை கண்டனர் ஊரார். "இவளை இவ்வாறு வருந்த விடுத்து, வினைமேற் சென்ற அவன் அறியாமையினை என்னென்பது!” எனப் பழி துாற்றினர். அந் நிலையில் ஆங்கு வந்த அப் பெண்ணின் தோழி, வருந்தி நிற்கும் அவளையும், அவள் வருத்தம் கண்டு, அவள் கணவனைப் பழி தூற்றும் ஊர்ப் பெண் களையும் பார்த்தாள். உடனே அப்பெண்ணை அடுத்துத் தோழி! கணவன் புகழில் கருத்துடையராதல் கற்புடை மகளிர்க்கு அழகு. கணவர் பழிக்குத் தாமே காரணராதல் அவர்க்குப் பொருந்தாது. கணவன்மார்க்குப் புகழ் தேடித் தரும் கற்புடை மகளிர் வழி வந்தவள் நீ. அத்தகைய நீ, அவன்பால் பிழை காணினும், அப் பிழை பொறுக்க லாகாப் பெரும் பிழையேயாயினும், அதைப் பிறர் அறியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/242&oldid=822256" இலிருந்து மீள்விக்கப்பட்டது