பக்கம்:பாலைச்செல்வி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 249 நின்றாள் தோழி. அந்நிலையில், தெருவில் ஒலியொன்று கேட்க, ஒடிச் சென்று கண்ட தோழி, அது அவன் ஏறிவந்த தேரின் ஒலியாதல் அறிந்து, அகம் மிக மகிழ்ந்து, உள்ளே விரைந்து வந்து, "தோழி! எண்ணி எண்ணி வருந்தும் நின் இன்னலெல்லாம் ஒழிய, நின் கணவர் தாம் கூறிச் சென்றவாறே, தம் வார்த்தை பிழையாது வந்து சேர்ந்தனர். வருந்தற்க! வாழ்க நின் அன்பு!" என வாழ்த்தினாள். அதுவே இச் செய்யுள். “மடிஇலான் செல்வம்போல் மரன்நந்த, அச்செல்வம் படிஉண்பார் நுகர்ச்சிபோல் பல்சினை மிஞ்றுஆர்ப்ப, மாயவள் மேனிபோல் தளிர்ஈன; அம்மேனித் தாய சுணங்குபோல் தளிர்மிசைத் தாதுஉக, மலர்தாய பொழில்நண்ணி, மணிநீர்க் கயம்நிற்ப, 5 அலர்தாய துறைநண்ணி, அயிர்வரித்து அறல்வார, நனிஎள்ளும் குயில்நோக்கி; இனைபுகு நெஞ்சத்தால் துறந்துஉள்ளார் அவர்எனத் துனிகொள்ளல், எல்லா! நீ; வண்ணவண்டு இமிர்ந்துஆனா வையைவார் உயர்ஏக்கர்த் தண்அருவி நறுமுல்லைத் தாதுஉண்ணும் பொழுதன்றோ,10 கண்நிலா நீர்மல்கக், கவவிநாம் விடுத்தக்கால் ஒண்ணுதால்! நமக்குஅவர் வருதும்என்று உரைத்ததை? மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர் வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ, 'வலனாகவினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால், 15 ஒளிஇழாய்! நமக்கு அவர்வருதும் என்று உரைத்ததை? நிலன்நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார் - - புலன்நாவில் பிறந்தசொல் புதிதுஉண்ணும் பொழுதன்றோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/252&oldid=822267" இலிருந்து மீள்விக்கப்பட்டது