பக்கம்:பாலைச்செல்வி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 250 இ. புலவர் கா. கோவிந்தன் பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால், சுடர்இழாய் ! நமக்குஅவர் வருதும்என்று உரைத்ததை? 20 எனவாங்கு; உள்ளுதொ றுடையும்நின் உயவுநோய்க்கு உயிர்ப்பாகி எள்ளறு காதலர் இயைதந்தார், புள்இயல் காமர் கடுந்திண்தேர்ப் பொருப்பன், வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே.” 25 வருவர் வருந்தற்க எனத் தோழி வற்புறுக்க, அவர் கூறிச் சென்ற காலம் இது அல்லவோ எனக் கூறிக் காலத்தைக் காட்டித் தலைவி வருந்த, அந்நிலையில் தலைவனும் வந்து சேர்ந்தானாக. அஃதறிந்த தோழி, 'வருந்தற்க, அவரும் வந்து விட்டார்!’ எனக் கூறியது இது. 1. மடி - சோம்பல்; இலான் - இல்லாதவன்; நந்த - வளம்பெற:2. படி- இருந்து முறையாக உணவு கொள்ளுதல்; சினை - கொம்புகளில், 3. ஈன - துளிர்க்க; 5. நண்ணி - அடுத்து 6. அயிர் - நுண்மணல்; வரித்து - அழகு செய்து, அறல்வார - அருவி ஓட, 7. நனி - மிகவும்; எள்ளும் - நகைக்கும்; இனைபு - வருந்தி; உகும் - கெட்டழியும், 8. உள்ளார் - நினையார்; துனி - வெறுப்பு:9. இமிர்ந்து - ஆரவாரித்து, ஆனா - இன்பம் குறையாத 11. கண்நிலா நீர் கண்ணில் நிறுத்தவும் நில்லாது விழும் நீர்! கவவி - தழுவி; 13. துருத்தி- ஆற்றிடைக்குறை; 14. வில்லவன்- கரும்பு வில்லோனாய காமவேள், 15. வினைவலனாக - வினைக்கண் வெற்றி பெறுக; 17. நிலன் - நிலத்தில் உள்ளார்; நாவில் திரி தரும் - நாவால் புகழப்படும்; 18. புலன் நாவில் - புலவர்களுடைய நாவில்; 19. நாடு - எண்ணி எண்ணி வருந்தும், 21. உயவுநோய் - வருத்தம் மிக்க காமநோய்; 23. இயை தந்தார் - வந்து சேர்ந்து கூடினார்; புள் - பறவை; புள் இயல் - பறவை போல் பறந்து பாயும் இயல்பு: 24, பொருப்பன் - பொதிய மலைக்குரிய பாண்டியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/253&oldid=822268" இலிருந்து மீள்விக்கப்பட்டது