பக்கம்:பாலைச்செல்வி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வந்தது வேனில்! வந்திலர் கணவர்! நம் வீடு நோக்கி வருவாரை, எதிர்நின்று வரவேற்று, அவர் வேண்டும் பொருள்களை வாரி வழங்கி வாழ்வதே இல்வாழ்க்கை மேற்கொண்டாரின் இன்றியமையாக் கடமையாம் என்பதையும், அவர் அக்கடமையை நன்கு ஆற்ற வேண்டின், அவர் பெரும் பொருள் உடையராதல் வேண்டும் என்பதையும், அப்பொருளை ஈட்டி வருதல் அவருள் ஆண்மகனாய கணவன் கடமையாம் என்பதை யும், அவன் சென்று பொருளிட்டி வரும்வரை, தனிமை தாங்கி, மனையின்கண் ஆற்றி இருத்தல் மனைவியின் கடமையாம் என்பதையும் உணர்ந்த உணர்வுடையராய ஒர் ஆண்மகனும், ஒரு பெண்மகளும், ஒருவரையொருவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். காதல் மிகுதியால், சில நாள்காறும், தம் கடமைகளை மறந்து, மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர். ஒருநாள் அக்கடமை உணர்ச்சி நினைவிற்கு வரவே, 56767 செல்வம் சேர்க்க, வெளிநாடு செல்ல விரும்பினான். கடமையறிந்த அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/254&oldid=822269" இலிருந்து மீள்விக்கப்பட்டது