பக்கம்:பாலைச்செல்வி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 இ புலவர் கா. கோவிந்தன் காதலி அதற்குத் தடை செய்திலள். ஆயினும், அவனைப் பிரிந்து, தனித்து வாழ வேண்டுமே என்ற கவலையால், அவள் சிறிதே கலங்கினாள். மனைவியின் மனக் கலக்கத்தை அறிந்த அவன், "காதலி கலங்கற்க ! இளவேனிற் காலத் தொடக்கத்தே இவண் வந்து சேர்வன்; அதுகாறும் கடமையைக் கருதிக் கலக்கம் ஒழிந்து இருப்பாயாக!” எனக் கூறித் தேற்றிச் சென்றான். அவளும் அவன் கூறியவாறே, தம் மனையற வாழ்வு மாண்புற வேண்டும் எனும் வேட்கை மிகுதியால், அவன் பிரிவை ஒருவாறு மறந்து மனம் தேறி இருந்தாள். சில நாட்கள் சென்றன. இளவேனிற் காலம் கால்கொளத் தொடங்கிற்று. அதை அறிவுறுத்தும் நிகழ்ச்சிகள் சில ஆங்காங்கே தோன்றின. பலதேவனின் வெண்ணிற மேனிபோல் வெண்கடம்பு மலர்ந்தது. அவன் வெண்ணிற மேனியிற் கிடந்து அசையும் பசுந்துளப மாலைபோல், அவ்வெண் கடம்பின் கிளைகளில், மயில்கள் கூடித் தம் தோகை விரித்து ஆடின. வண்டும், சுரும்பும் ஒரு பாலும், தும்பி ஒரு பாலுமாகத் தேனைத் தேடிப் பறந்து திரியலாயின. தேனிக்கள் தாமரை மலர்களைத் தேடிச் சென்று மொய்த்தன. எங்கு நோக்கினும், மலர்கள் மலர்ந்து மணம் வீசின. மரக் கிளைகளில் அமர்ந்து குயில்கள் கூவின. இக் காட்சிகளை அவள் கண்டாள். இளவேனிற் பருவத்தின் தொடக்கமே அது என்பதையும், வேனில் விழா நிகழும் காலம் அண்மையிலேயே உளது என்பதை யும் அவை அறிவுறுத்தின. • . இளவேனிற் காலத்து இயற்கையின் மலர்ச்சி, அவளுக்கு வேனில் விழாக் காட்சிகளை நினைப்பூட்டிற்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/255&oldid=822270" இலிருந்து மீள்விக்கப்பட்டது