பக்கம்:பாலைச்செல்வி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 253 அதனால் வெண்கடம்பு, வெண்மணல் பரந்த அரங் காகவும், அவ் வெண்கடம்பின் மீது அமர்ந்து ஆடும் மயில்கள், அரங்கின் இடைநின்று ஆடும் ஆடுமகளாகவும், வண்டும், சுரும்பும் செய்யும் ஆரவாரம், யாழ் ஓசை யாகவும், தும்பியின் ரீங்காரம், வாரம் பாடும் விறலியரின் கானப் பாடலாகவும், தேனிக்களின் பேரொலி, ஆடல் பாடல்களை அணி செய்யும் பின்னணி இசைகளாகவும், மரங்களின் கண்ணைப் பறிக்கும் பன்னிற மலர்கள், ஆடல் பாடல் காண வாரீர்! என வழிப்போவார்ை வருந்தி அழைக்கும் வரவேற்பாளராகவும் அவள் கண்ணிற்குக் காட்சியளித்தன. இயற்கையின் எழிலோவிய மாய இவ்வாடலை இன்று கண்டேன். ஆனால் அவர் உடன் இல்லை; அவர் இல்லாமையால் அக்காட்சி மகிழ்ச்சி தந்திலது. மனத்துயரையே தந்தது. அவருடன் இருந்து காணும் அந்நல் வாய்ப்பை இன்று இழந்தது போன்றே, வரவிருக்கும் வேனில் விழா இன்பத்தையும் இழக்க நேரிடுமோ!' என எண்ணினாள். அந்நிலையே அவள் உறுதி தளர்ந்தது. கவலை மிகுந்தது. கவலை மிகவே, அவள் உடலும் தளர்ந்து தன் நலன் இழக்கத் தொடங் கிற்று. நெற்றி, சிறிது சிறிதாகப் பசந்து பசந்து, முழுதும் பசந்தே விட்டது; தோள்கள் சிறிது சிறிதாகத் தளர்ந்து தளர்ந்து முற்றும் தளர்ந்தே விட்டன. தண்ணிர் தெளிந்தும், குளிர்ந்தும், சிறு சிறு அருவிகளாகப் பிரிந்தும் ஒடும் ஆற்றைக் கண்டவுடனே, அவள் கண்களினின்றும், கண்ணிர், வெந்நீரின் வெள்ளமென விழலாயிற்று; அவள் உள்ளக் கலக்கம் உடலைத் தாக்கவே, அவ்வுடல், வெப்பம் மிகுந்து, வியர்க்கத் தொடங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/256&oldid=822271" இலிருந்து மீள்விக்கப்பட்டது