பக்கம்:பாலைச்செல்வி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 இ. புலவர் கா. கோவிந்தன் - இவ்வாறு, உள்ளக் கவலையால் உடல் சோர்ந் திருக்குங்கால், ஆங்கு வந்த அவள் தோழியும், அவள் நிலை கண்டு பெரிதும் வருந்தினாள். தோழியைக் கண்ட வுடனே, அவள் துயர் முன்னினும் அதிகமாயிற்று. அதுகாறும் தனிமையிற் கிடந்தமையால் வாய் திறவாதே வருந்தியிருந்தவள், துணையாகத் தோழியைக் கண்ட வுடனே, அவளை ஆரத் தழுவிக் கொண்டு, "தோழி! நம் கணவர், நம்பால் அன்பு இல்லாமையால் சென்று விட்டாரோ? அன்பிருக்கவும், தம் நிலை அறிவித்து, ஒரு தூது விட வேண்டும் என்பதை, வினை மிகுதியால் மறந்து விட்டாரோ? அவர் நம்மிடத்தில் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்பதைத் தோழி! அவர் வருங்காறும் வாழ்ந்திருந்து காண்பது இயலுமோ? ஒருகால், பிரிந்து சென்றவர், நம்மை மறந்து மீண்டு வாராது, ஆங்கேயே இருந்தும் விடுவரோ? எதையும் என்னால் துணிதற்கு முடியவில்லையே! என்ன செய்வேன், தோழி?” எனப் பலப்பல கூறி வாய்விட்டு அரற்றினாள். பெண்ணின் துயர்நிலை கண்டு வருந்திய அத் தோழி, "அன்புடையாய், யானும் ஒரு பெண்-உன்னோடு வாழ்பவள். உனக்குத் தெரிந்ததைவிட, அதிகமாக எனக்கு யாது தெரியும்? நின் நிலை கண்டு யானும் வருந்து கின்றேன். சிலர், சென்றவிடத்திலேயே சேனெடுங்காலம் நின்று விடுதலும் உண்டு, எனச் சென்று வந்தவர் சிலர் கூறக் கேட்டுள்ளேன். அதை நினைக்க, என் உள்ளம், வேள்விப் புகையேபோல், வெந்து பெருமூச்செறிகிறது. என் செய்வேன்?" எனக் கூறி, அவளும் வருந்தினாள். கணவனைப் பிரிந்து தனித்திருப்பாள் துயர் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/257&oldid=822272" இலிருந்து மீள்விக்கப்பட்டது