பக்கம்:பாலைச்செல்வி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 255 காணின், தமிழ் நாட்டு மகளிர் தாமும் துயர் உறுவர் என்பதற்கு இத் தோழி ஒரு நல்ல எடுத்துக்காட்டு. “கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராத்து நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர, வடிநரம்பு இசைப்பபோல், வண்டொடு சுரும்புஆர்ப்பத், தொடிமகள் முரற்சிபோல் தும்பிவந்து இமிர்தர, இயன்னழீஇய வைபோல எவ்வாயும் இம்' எனக், 5 கயன்.அணி பொதும்பருள் கடிமலர்த் தேன்ஊத, மலர்ஆய்ந்து வயின்வயின் விளிப்பபோன், மரன்ஊழ்ப்ப, இருங்குயில் ஆலப் பெருந்துறை கவின்பெறக் குழவிவேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும் வந்தன்று; - 10 வாரார், தோழி! நம் காதலோரே, . பாஅய்ப் பாஅய்ப், பசந்தன்று நுதல்; சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்; நனிஅறல் வாரும் பொழுதுஎன, வெய்ய பனி அறல் வாரும் என்கண்; 15 மலையிடைப் போயினர் வரல்நசைஇ, நோயொடு முலையிடைக் கனலும்என் நெஞ்சு, - 'காதலிற் பிரிந்தார்கொல்லோ? வறிதோர் தூதொடு மறந்தார்கொல்லோ? நோதகக் காதலர் காதலும் காண்பாம் கொல்லோ? 20 துறந்தவர் ஆண்டாண்டு உறைகுவர் கொல்லோ? யாவது நீளிடைப் படுதலும் ஒல்லும்; யாழநின் வாள்.இடைப் படுத்த வயங்கீர் ஓதி! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/258&oldid=822273" இலிருந்து மீள்விக்கப்பட்டது