பக்கம்:பாலைச்செல்வி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 புலவர் கா. கோவிந்தன் நாள்அணி சிதைத்தலும் உண்டு எனநயவந்து கேள்வி அந்தணர் கடவும் 25 வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சு.” காலம் கண்டு ஆற்றாத தலைவியது நிலைமை கண்டு ஆற்றாத தோழி, தன் ஆற்றாமையை அவட்குக் கூறியது. 1. கொடுமிடல் நாஞ்சில் - கொடிய, வலிய கலப்பை, நாஞ்சிலான் - பலதேவன்; தார் - மாலை; 2. நெடுமிசை - உயர்ந்த இடத்தே சீர - சிறப்பினை உடைய,3. வடிநரம்பு-முறுக்கற வடித்த நரம்பு 4. முரற்சி - கானப்பாட்டு, இமிர்தர - ஒலிக்க, 5. இயன் - இசைக்கருவி, இம் என - "இம்” எனும் ஒலி எழ, 6. கயன் - குளம், பொதும்பர் - பூஞ்சோலை 7. ஊழ்ப்ப - மலர; 9. குழவிவேனில் - இளவேனில்; 12. பாஅய் - பரவி, 13. சாஅய் - தளர்ந்து 14. அறல் - வடிகால் நீர் வாரும் - ஒழுகும்; 15. பனி - கண்ணிர் அறல் வாரும் - ஒழுகும் ஒருசொல் 17. கனலும் - வேகும், காந்தா நிற்கும்; 24, நாள் - வருவேன் என அவர் குறித்துச் சென்றநாள்; 25. கேள்வி - நூலைக் கற்றுப்பெற்ற கேள்விச் செல்வம்; கடவும் - செய்யும். பாலைச் செல்வி முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/259&oldid=822274" இலிருந்து மீள்விக்கப்பட்டது