பக்கம்:பாலைச்செல்வி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இ. புலவர் கா. கோவிந்தன் அழகிய அறிவுரைகளைப் பாடற் பொருளாகக்கொண்டு எழுந்தது இப்பாட்டு: 'அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும், வறன் நீந்தி நீசெல்லும் நீள்.இடை நினைப்பவும், இறைநில்லா வளைஒட, இதழ் சோர்வு பனி மல்கப், பொறைநில்லா நோயோடு புல்என்ற நுதல்இவள், விறல்நலன் இழப்பவும் வினைவேட்டாய் ! கேளினி; 5 உடைஇவள் உயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல விடைகொண்டு யாம் இரப்பவும் எமகொள்ளாய் ஆயினை கடைஇய ஆற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன; வல்லைநீ துறப்பாயேல் வகைவாடும் இவள்ளன 10 ஒல்லாங்கு யாம்இரப்பவும் உணர்ந்தியாய் ஆயினை; செல்லும் நீள் ஆற்றிடைச் சேர்ந்து எழுந்த மரம்வாடப் புல்லுவிட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன; பிணிபு நீ விடல்சூழின் பிறழ்தரும் இவள்எனப் பணிபுவந்து இரப்பவும் பலசூழ்வாய் ஆயினை; 15 துணிபுநீ செலக்கண்ட ஆற்றிடை அம்மரத்து அணிசெல வாடிய அந்தளிர் தகைப்பன; அதனால், யாம் நிற்கூறவும் எமகொள்ளாய் ஆயினை, ஆனாது, இவள்போல் அருள்வந் தவைகாட்டி 20 மேல்நின்று மெய்கூறும் கேளிர்போல் நீசெல்லும் கானம் தகைப்ப செலவு.” தலைமகனால் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, அதைத் தலைமகட்கு உரைத்து, அவள் ஆற்றாமை கண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/26&oldid=822275" இலிருந்து மீள்விக்கப்பட்டது