பக்கம்:பாலைச்செல்வி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 25 தலைமகற்கு உணர்த்தவும், மேலும் பிரிதலையே எண்ணி இருந்த அவனை, நீர் செல்லும் காணமே, தும்மைத் தடுத்து நிறுத்தும் என, அவன் போதலைத் தவிர்க்குமாறு கூறியது இது. 1. அயல்-அயலில் உள்ளார்; அம்பல்-ஒருவரைப் பழித்து இழிவாகக் கூறுவனவற்றைப் பலர் அறியக் கூறுவதன் முன்னர்த் தமக்குள்ளே மெதுவாகக் கூறிக் கொள்ளுதல். 2. வறன்-நீர் அற்ற தன்மை; 3. இறை-முன்கை; இதழ்-கண்ணிதழ், பனி-கண்ணிர் 4. புல் என்ற-அழகு இழந்த 5. விறல்நலன்-பேரழகு, 5. உடை இவள்-உன்னை உயிராக உடைய இவள், 7. எம-யாம் கூறியனவற்றை, 8. கடைஇய-செலுத்திய ஆற்றிடை-வழியில், 9. அடை-இலைகள்; தகைப்பன்-தடுத்து நிறுத்தவல்லன; 10. வல்லை-விரைந்து, வகை-அழகு, 11. ஒல்லாங்கு-பொருந்தும் வகையில்; உணர்ந்தியாய்-உணர்ந்து கொள்ளாதவன்; 13. புல்லுவிட்டு-பற்றிப் படர்தலை விடுத்து; இறைஞ்சிய-தாழ்ந்து போன; 14. பிணிபு-அன்பால் பிரியாதிருத்தலை, பிறழ்தரும்-இறந்து போவாள்; 15. பணிபு-பணிந்து; பல சூழ்வாய்-போதற்கு வேண்டு வனவற்றையே எண்ணுகின்றனை, 20. ஆனாது-அமையாது அருள் வந்தவை-அருள் நிரம்பிய காட்சிகளை; 21 மெய்-உண்மை உரைகளை கேளிர்-உறவினர்; கானம் செலவு தகைப்ப-காடு நின் போக்கைத் தடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/27&oldid=822277" இலிருந்து மீள்விக்கப்பட்டது