பக்கம்:பாலைச்செல்வி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அன்பு கண்டு அஞ்சினேன்! அழகும் இளமையும் அரும்பெருங் குணங்களும் உடையாள் ஒரு பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு மணந்து மனையற வாழ்வு மேற்கொண்ட ஒர் இளைஞன், இல் வாழ்க்கை இனிது நடைபெறுதற்குத் துணை புரிய வல்லது பொருள் என உணர்ந்து, அப் பொருட் செல்வத்தைப் பெரும் அளவில் சேர்த்து வைக்க விரும்பினான். தாம் பிறந்து வாழும் நாட்டைக் கடந்து பிறநாடு புகுந்து பொருள் ஈட்டி வருவார், தம் மனைவியரையும் உடன் கொண்டு செல்வது பண்டைக் காலத்தில் இல்லை. அக்காலம் நல்ல வழிகள் அமையாத காலம்; காடுகளையும், மலைகளையும், காட்டாறு களையும், மணல் வெளிகளையும் இடையிடையே பெற்றி ருந்த அவ்வழிகள், கொடுவிலங்குகளையும், கொள்ளைக் காரர்களையும் கொண்டிருந்தன. மேலும், அவ்வழிகளை விரைந்து கடக்க வல்ல ஊர்திகளும் அக் காலத்தில் இல்லை. அதனால், வாணிபம் முதலாயின கருதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/28&oldid=822278" இலிருந்து மீள்விக்கப்பட்டது