பக்கம்:பாலைச்செல்வி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 27 வெளிநாடு சென்ற அக்கால ஆடவர் தம் வாழ்க்கைத் துணைவியரை உடன் கொண்டு செல்ல அஞ்சினர். "முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை!" என விதி வகுத்து வாழ்ந்தனர். மேற்கூறிய காரணங்களால் தன்னைப் பிரிந்து ஒரு சிறு பொழுதும் வாழ்ந்து அறியா-வாழமாட்டாப் பேரன்பு வாய்ந்த தன் மனைவியை, மனையகத்தே தனித்திருக்க விடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. பொருள் இன்றியமையாதது எனும் உணர்வு, இல்லக் கிழத்தி தனித்திருந்து வருந்தினும், பிரிந்து செல்க எனப் பின்னின்று துரத்தினும், ‘என்னைக் காணாளாயின் எல்லையிலாத் துயர் உறுவள்!' என அவள் துயர் காரணமாகவும், இன்று பிரிந்து செல்லும் நான், இனி எத்துணைக் காலம் கழித்து வந்து இவளைக் காண்பனோ! எனத் தன் துயர் காரணமாகவும், பெரிதும் வருந்திற்று அவன் உள்ளம். இவ்வாறு, அவள் பால் காட்டும் இரக்கமும், தன் ஆற்றாமையும், அவள்பால் அதுகாறும் காட்டாத அன்பை யெல்லாம் காட்டச் செய்தது. அதனால், அவளை இமைப் பொழுதும் பிரியவிடாது பற்றிக் கிடந்து நனிமிகப் பாராட்டலை மேற்கொண்டான். கழுத்தை அணி செய்து கிடக்கும் கலங்களாலும், அக் கலங்களைச் சுற்றிக் கிடந்து தொங்கும் முத்து வடங்க ளாலும் பேரழகு பெற்றுத் தோன்றும் அவள் மார்பைப் பல கால் அனைத்து மகிழ்ந்த அவன், அம்மட்டோடு அமையாது, அவளை ஆரத் தழுவிய காலத்தே, கலைந்து பரக்கும் அவள் தலைமயிரைத் தன் கைகளால் பலகால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/29&oldid=822279" இலிருந்து மீள்விக்கப்பட்டது