பக்கம்:பாலைச்செல்வி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புலவர் கா. கோவிந்தன் கோதி அழகு செய்வானாயினன். முட்களைப்போலும் கூர்மையும், வெண்மையும் வாய்ந்து, வெளிப்படும் அவள் பற்களைப் பார்த்து, நாணல் முளை நானும் வெண் பற்கள் எனவும், அப்பற்களிடமாகச் சுரக்கும் உமிழ்நீரை உண்டு, தேனும் நானும் தெவிட்டாத் தீ நீர் எனவும் பாராட்டியவன், அம்மட்டோடு நில்லாது, அவளைத் தழுவியக்கால் நிலைகுலைந்த அவள் அணிவகைகளை, அவையவை இருக்க வேண்டும் இடங்களில் இருக்குமாறு, செப்பம் செய்வானாயினான். மாமை நிற மேனியில் பொன்னிறச் சுணங்கு பெற்றுப் பேரழுகு வாய்ந்து விளங்கும் அவள் உடலழகை, வைத்த கண் வாங்காதும், விழித்த விழி இமையாதும் பார்த்துப் பார்த்துப் பேரின்பம் கொண்டவன், அம்மட்டோடு நில்லாது, அவள் நெற்றி யிடத்து அரும்பும் வியர்வைத் துளிகளைத் துடைப்பான் போல், அந்நுதலை அன்பு சுரக்கத் தடவிக் கொடுப்பா னாயினான். அவன் நிலை இதுவாக, அவன் அன்பில் புதுமையினைக் கண்டாள் அவன் மனைவி. வழக்கத்திற்கு மாறாக அவன் காட்டும் பேரன்பிற்குக் காரணம் யாதோ? அவ் அன்பு நிகழ்ச்சிகளுக்கிடையே மறைந்து கிடக்கும் உண்மை யாதோ? இவ்வாறு பேரன்பு காட்டும் அவன் உள்ளம் எதைக் கருதுகிறதோ? அவன் காட்டும் மிக்க தலையளியின் பின்னால் மறைந்து கிடப்பது யாதோ? புயலுக்கு முன் உண்டாம் அமைதிபோல், பின்னால் வற்றப் போகும் அவ் அன்பின் வெள்ளப் பெருக்கோ இப்பேரன்பு? இன்று காட்டும் அன்பு, நாளை இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/30&oldid=822281" இலிருந்து மீள்விக்கப்பட்டது