பக்கம்:பாலைச்செல்வி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 29 யாய் விடுமோ? என்றெல்லாம் எண்ணித் துணுக்குற்றது அவள் உள்ளம். அவன் அன்பு குறைந்து விடுமோ என்று எண்ணிய அக்கணமே அவள் கலக்கம் பெரிதாயிற்று. கண்ணிர் கசியக் கலங்கி நிற்பாளைக் கண்டாள் தோழி. கண்ணிற்கும், கருத்திற்கும் ஏற்ற கணவன் அருகிருந்து அன்பு காட்ட அக மகிழ்ந்து வாழ வேண்டியவள், விம்மி விம்மி அழக்கண்டு வியப்புற்றாள் தோழி. தாய் வீட்டாரால் இவள் துயர் உறுதற்கு இல்லை. அவர் தன்னேரில்லாப் பெரு வாழ்வும், இவள் மாட்டுத் தனியன்பும் உடையர். காதல் கொண்டு கைப்பிடித்த கணவன் வீட்டாரோ, கண்ணின் மணியெனக் காத்து வருகின்றனர். மகிழ்ந்து மணந்து கொண்ட கணவனும், அன்பு, ஆற்றல், பண்பு, பொருட்செல்வங்களால் குறை யுடையானல்லன்; அங்ங்னமாகவும் இவள் அழுவா னேன்? அழக் காரணம் யாது?’ என்ற சிந்தனையில் சென்றது அவள் உள்ளம். அவள் துயர்க் காரணம் அறியும் அவாவோடு அவளை அணுகினாள் தோழி. தன்பால் வந்து, தன் துயர்நிலை கண்டு தானும் துயர் உற்று நிற்கும் தோழிபால், தன் கணவன் தன்பால் காட்டும், வழக்கத்திற்கு மாறான பேரன்பையும் பெருந் தலையளியையும் விளங்கக் கூறித், "தோழி! அவர் பொருளிட்டி வரத் துணிந்து விட்டார்; இன்றோ, நாளையோ போவது உறுதி; இதைச் சின்னாட்களாக, அவர் என்னிடம் நடந்து கொள்ளும் முறைகளே உணர்த்துகின்றன. தோழி! அவரைப் பிரிந்து எவ்வாறு தனித்திருந்து வாழ்வேன்? அவர் என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/31&oldid=822282" இலிருந்து மீள்விக்கப்பட்டது