பக்கம்:பாலைச்செல்வி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இ. புலவர் கா. கோவிந்தன் என்றும் பிரியார் என்ற துணிவினாலன்றோ, என் தாயை மறந்தேன்; தந்தையை மறந்தேன்; சீரும் சிறப்பு மளித்து வளர்த்த செவிலியை மறந்தேன்; ஊரை மறந்தேன்; உடன் ஆடும் தோழியரை மறந்தேன்! இவ்வளவையும் மறந்து வந்துள்ள என்னை, இங்கு வாழ்விப்பது அவர் அன்பு ஒன்றேயன்றோ? அவ்வன்பும் இல்லாயின், யான் எங்ங்ணம் உயிர் வாழ்வேன்!” என்று கூறி வருந்தினாள். கணவன் பிரியின் தான் இன்புற்று வாழமுடியாதே, தனித்துக் கிடந்து துயர்உற வேண்டுமே என்பது மட்டும் அவள் கவலைக்குக் காரணமாகாது. பொருளிட்டிவரச் செல்லும் அவன் போக வேண்டிய வழியின் கொடுமையே அவள் துயர்க்குப் பெருங்காரணமாம். பருத்துத் திரண்ட உடலும், கருத்துச் சுருண்ட மயிரும், புலிப் பார்வையொடு பொருந்தும் கண்களும் உடையராய் ஆறலைக் கள்வர், கொடுமையே உருவாய்க் கையில் வில்லேந்தி, வழியில் வருவாரைக் கொன்று கொள்ளையிடற்காம் வாய்ப்பினை எதிர்நோக்கி நிற்கும் கொடுமையுடையது அவ்வழி வழிச் செல்வாரின் பொருள்களைக் கொள்ளையிடுவது மட்டுமே அவர் குறிக்கோள் அன்று, கண்ணிற் காணும் மக்கள், தம் கையம்பு தைக்கப் பெற்றுத் துள்ளி வீழ்ந்து துடித்து உயிர் விடும் காட்சியைக் கண்டு உள்ளம் உவப்பதே அவர் குறிக்கோளாம். அதனால், வழியில் வருவாரிடத்தே, தாம் கைப்பற்றிப் பயன் கொள்ளத்தக்க பொருளேதும் இல்லை என்பதை அறிந்த பின்னரும், அவரைப் போகவிடாது அவர் மீது அம்பு ஏவித் துயர் விளைத்து அவர் துயர்நிலை கண்டு மகிழ்ந்து வாழ்வர். வழியில் வரும் ஏழை எளியவரையும், இவ்வாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/32&oldid=822283" இலிருந்து மீள்விக்கப்பட்டது