பக்கம்:பாலைச்செல்வி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 31 இரக்கமற்றுக் கொன்று வீழ்த்தும் கொடியோர் வாழும் கொடுமையுடைமையால், பிணந்தின்று வாழும் இயல்பினவாய பறவைகளும், அவண் செல்ல அஞ்சும். அத்தகைய கொடுமை யுடையது அவ்வழி. அவ்வழியில் செல்லும் தன் கணவன், தன்னேரில்லாப் பேராண்மை யுடையனே யெனினும், பலர் கூடி எதிர்க்கும் அக் கள் வரைத் தனித்திருந்து வெல்ல மாட்டாது வருந்துதலும் உண்டாம். மேலும் பொருளற்ற வறியோர்களையே வாட்டி வருத்தும் வன்கண்மையுடையராய் அவ்வாற லைக் கள்வர், பெரும் பொருள் கொண்டு மீளும் தன் கணவனை வறிதே விடார். வளைத்துத் துயர் செய்யவே துணிவர். ஆகவே, இன்று செல்லும் கணவன், வழியில் ஏதம் உறாது மீள்வன் என எதிர்பார்த்தல் இயலாது. இந்த எண்ணமே, அவளைப் பெருந்துயர்க்கு உள்ளாக்கிற்று. தோழிபால் அதையும் கூறித் துயர்உற்றாள் அப்பெண். அப் பெண்ணின் துயர்நிலை யறிந்தாள் தோழி. கணவன் உடனிருந்து அன்பு காட்டும்போதே அவள் நிலை இதுவானால், அவள் அவனைப் பல நாள்காறும் காணாது கலங்குமாறு விடுத்துப் பிரிந்து சென்று விடு வானாயின், அவள் உயிர் தரித்திராள் என்பதை உணர்ந்தாள். அதனால், பொருளிட்டும் முயற்சி மேற் கொண்டு வெளிநாடு செல்ல விரும்பி நிற்கும் அவன்பால் சென்றாள். ஆங்கு அவன் வெளியூர்க்குச் செல்வதற்காம் ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தான். எல்லா வற்றையும் முடித்துவிட்டு இறுதியாகச் செல்வார்க்கு இடைவழியில் உண்டாம் ஏதத்தை விலக்கும் வழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/33&oldid=822284" இலிருந்து மீள்விக்கப்பட்டது