பக்கம்:பாலைச்செல்வி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ళ புலவர் கா. கோவிந்தன் துணையாக வேல் ஒன்று வேண்டும் என்பதை உணர்ந்து, தன் வேலை எடுத்துச் செப்பம் செய்து கொண்டிருந்தான். பயனுறுதல் இன்றிக் கிடந்தமையால் படிந்திருந்த மாசு முற்றும் போக, வெண்ணிறம் பெற்று விளங்கிய அவ்வேலை வலக்கையில் ஏந்தி நிற்கும் அவனைக் கண்டாள். "வேல் துணையாக வழியைக் கடந்து வேற்றுார் சென்று பொருளிட்டி வரத் துணிந்து நிற்கும் அன்ப! புறப்படுவதன் முன்னர் யான் கூறுவனவற்றைக் கேட்டுப் பின்னர்ப் போவதும் தவிர்வதும் புரிவாயாக. விளங்கக் கூறி விடை பெற்றுச் செல்வது இயலாது என்பதை உணர்ந்து எமக்கு அறிவியாதே போகத் துணிந்தனை ! பொருள் தேடிப் போகும் நின் போக்கு எமக்குத் தெரியாது என எண்ணி விட்டனை போலும், பிறவிப் பயனாம் புகழைத் தேடித் தருவது பொருள் என அப் பொருள்மீது கொண்ட பெருங்காதலால், கூறிச் செல்வதாயின், அம் முயற்சிக்குக் கேடு வந்துறுமே என அஞ்சிச் சொல்லாதே செல்லத் துணிந்த நின் ஆர்வம் கண்டு அகமகிழ்கின்றேன். ஆனால், அன்ப! நீ அறிவித்திலை யெனினும், அதை யாம் உணர்ந்து கொண்டோம். பேரன்புடையாளைப் பிரிந்து, சேணெடுந் தூரம் செல்கின்ற யான், என்று வந்து இவளைக் காண்பேனோ!' எனும் ஏக்கத்தால், நீ அவள்பால் காட்டிய அளவிற்கு மிஞ்சிய பேரன்பு, நின் பிரிவை எமக்கு உணர்த்திவிட்டது. என்றேனுமொரு நாள் நீ பிரிந்து போய்விடுவாய் என்பதை உணர்ந்து கொண்டாள் நின் காதலி, அதனால் பெருந்துயர் கொண்டாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/34&oldid=822285" இலிருந்து மீள்விக்கப்பட்டது