பக்கம்:பாலைச்செல்வி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 33 உள்ளம் படும் பாட்டினை நீ அறிந்திலை. தன் உயிர், உடல், உடைமை யெல்லாவற்றையும் ஒருங்கே இழந்தவள்போல் பெருந்துயர் கொள்கிறாள் அவள். பிரிந்து விடுவாய் என்பதை உணர்ந்தே, இவ்வாறு துயர்உறுபவள், நீ பிரிந்து சென்றுவிட்ட பின்னர் உயிர் வாழ்வள் என எதிர் நோக்கல் இயலுமோ? அந்நிலையில் அவள் உயிர் வாழாள். நீ பிரிந்த அந்நிலையே, அவள் உயிர் அவள் உடலில் நில்லாது, நின்னைத் தொடர்ந்து போய்விடும். இது உறுதி. ஆகவே, அன்ப! அவளோடு கூடி மேற் கொள்ளும் இல்லற வாழ்வே இன்பம் நிறைந்ததாகும். இறவாப் புகழ் உடையதாக்கும் பொருளை ஈட்டி வைத்தல் வேண்டும் எனும் ஆர்வத்தில், அவ்வில் வாழ்க்கைத் துணையாம் அவளை இழந்துவிடும் அறியாச் செயலை மேற்கொண்டு விடாதே; பொருள் கருதிச் செல்லும் நின் போக்கினை, இப்போது கைவிடுவாயாக!” என வேண்டிக் கொண்டாள். அவள் வேண்டுகோளை அழகுற எடுத்துக் கூறுவது இப்பாட்டு: "வலிமுன்பின், வல்லென்ற யாக்கைப், புலிநோக்கின், சுற்றமை வில்லர், கரிவளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர், தாம் கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார்; தொடர்ந்து உயிர்வெளவலின் 5 புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை வெள்வேல் வலத்திர் பொருள்தரல் வேட்கையின் உள்ளினர் என்பது அறிந்தனள் என் தோழி, 'காழ்விரி வகையாரம் மீவரும் இளமுலை போழ்துஇடைப் படாஅமல் முயங்கியும் அமையார், என் 10 Lisetosu-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/35&oldid=822286" இலிருந்து மீள்விக்கப்பட்டது